சிதாமார்ஹி: பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் ஆய்வு செய்துவிட்டுச் சென்ற பின்னர், சற்று நேரத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஆற்றின் கரை உடைந்தது.
இதனால், வெள்ளத் தடுப்புப் பணிக்காகப் போடப்பட்டிருந்த கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
இங்குள்ள சிதாமார்ஹி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் லவாஹே ஆற்றின் பழைய நீர் பாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய மூன்று கிலோ மீட்டர் தொலைல் உள்ள பழைய நீர்வழிப் பாதையில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்ட முதல்வர் நிதிஷ்குமார், நீரை திறந்துவிட உத்தரவிட்டார். ஆனால், ஆற்றங்கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

