மலை­யாள நடி­கர் மோகன்­லா­லுக்கு நோட்­டீஸ்

மலை­யாள நடி­கர் மோகன்­லா­லுக்கு நோட்­டீஸ்

1 mins read
b2904e25-453f-4e8a-bf71-ac523ab4a2d7
-

திரு­வ­னந்­த­பு­ரம்: பழங்­கா­லப் புரா­த­னப் பொருள்­கள் மோசடி வழக்கு தொடர்­பில், மலை­யாள நடி­கர் மோகன்­லா­லுக்கு அம­லாக்­கத் துறை நோட்­டீஸ் அனுப்­பி­யுள்­ளது.

அடுத்த வாரம் விசா­ர­ணைக்கு நேரில் முன்­னி­லை­யா­கும்­படி அழைப்பு விடுத்­துள்­ள­னர்.

கேரள மாநி­லம், கொச்­சி­யைச் சேர்ந்­த­வர் மோன்­சன் மவுங்­கால். ஆயுர்­வேத மருத்­து­வ­ரான இவர், தொல்­லி­யல் பொருள் சேக­ரிப்­பாளர். கோடிக்­க­ணக்கான ரூபாய் மோசடி செய்துவிட்­ட­தாக இவர் மீது காவல்நிலை­யத்­தில் புகார் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

பழங்­கா­லப் பொருள்­கள் மீது அதிக ஆர்­வம் கொண்­ட­வ­ரான மோகன்­லாலுக்கு, மோன்­சன் மவுங்­காலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மோன்சன் மவுங்கால் பற்றி ேமாகன்லாலிடம் விசாரிக்க உள்ளனர்.