கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் திருமண மண்டபத்தில் மின்தூக்கி அறுந்து விழுந்து சீத்தல், 19, என்ற மாணவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில், திருமண மண்டபத்தின் மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மகள் ஜெய்பிரியா-மருமகன் நவீனுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் நிகழ்ந்த விபத்தில், பதினொன்றாம் வகுப்பில் படித்து வந்த மாணவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தை ஒட்டி, ஜெயகுமாரின் மகள் தலைமறைவாகி விட்டதாகத் தகவல்.
திருமண மண்டபத்தில் உணவு பரிமாறும் வேலைக்காக வந்த காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தைச் சேர்ந்த மாணவன் சீத்தல் உயிரிழந்தார். ஜெயராமன் 23, விக்னேஷ், 21, ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

