தமிழ்நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு

தமிழ்நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு

2 mins read
3d3d9265-1836-448d-9501-5491bffca889
-

பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது

சென்னை: தமி­ழ­கத்­தில் சுமார் இரு­பது விழுக்­காட்­டி­ன­ருக்கு சிறு­நீ­ரகக் கோளாறு இருப்­ப­தாக அண்­மைய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

அர­சுத் தரப்­பில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்­வின் மூலம் தமிழக முதல்­வர் காப்­பீட்­டுத் திட்­டத்தை சிறு­நீ­ரக பாதிப்பு உள்­ள­வர்­கள்­தான் அதி­கம் பயன்­ப­டுத்தி உள்­ள­னர். அவர்­களில் ஏரா­ள­மா­னோர் ரத்த சுத்­தி­க­ரிப்­புக்­காக (டயா­லி­சிஸ்) விண்­ணப்­பித்­துள்­ள­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

மொத்­தம் 4,741 பேரி­டம் இருந்து விவ­ரங்­கள் சேக­ரிக்­கப்­பட்­டன. இதில் 455 பேருக்கு, அதா­வது 9.5 விழுக்­காட்­டி­னருக்கு ரத்தத்­தில் 'க்ரி­யா­டி­னின்' அளவு அதி­கம் இருந்­தது. இதே­போல் 276 பேருக்கு, அதா­வது 5.8 விழுக்­காட்­டி­ன­ருக்கு ஆல்பு­மின் அளவு அதி­க­மாக இருப்­ப­தும் 367 பேருக்கு, அதா­வது 7.7 விழுக்­காட்­டி­ன­ருக்கு சிறு­நீ­ரில் ரத்­தம் இருப்­ப­தும் கண்டறி­யப்­பட்­டுள்­ளது.

"ஆய்­வின்­போது மொத்­தம் 934 பேருக்கு சிறு­நீ­ரகக் கோளாறு இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. இது ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்­கை­யில் 19.7 விழுக்­காடு ஆகும். இதன் வழி சிறு­நீ­ரக கோளா­று­கள் குறித்த விழிப்­பு­ணர்வை பொது­மக்­க­ளி­டம் அதி­க­ரிக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது," என பொது சுகாதா­ரத்­துறை இயக்­கு­ந­ரகம் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்ளது.

தமி­ழ­கத்­தில் தற்­போது தொற்றா நோய்­களில், சிறு­நீ­ரகக் கோளா­று­கள் கார­ண­மா­கத்­தான் அதிக உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­ப­டு­வ­தா­கச் சுட்­டிக்­காட்டி உள்ள அந்த இயக்­கு­நரகம், தமி­ழ­கத்­தில் சிறு­நீ­ரக கோளா­று­கள் எந்த அள­வில் என்­பது தொடர்­பாக முழு­மை­யான தர­வு­கள் அர­சி­டம் இல்லை எனக் கூறி­யுள்­ளது.

"அண்­மைய ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் சிறு­நீ­ரகக் கோளா­று­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பட்­டி­யல் தனியே தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளுக்கு மூன்று மாதங்­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் பரி­சோ­தனை நடத்­தப்­படும். அப்­போது கோளா­று­கள் நீடிப்­பது உறுதி செய்­யப்­பட்­டால், அவர்­கள் நாள்­பட்ட சிறு­நீ­ரக கோளாறு கொண்­ட­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்­கள்," என பொது­ சு­கா­தா­ரத்­துறை இயக்­கு­ந­ர­கம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த பிப்­ர­வரி மாதம் மாநி­லம் முழு­வ­தும் 177 பகு­தி­களில், 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளி­டம் 92 ஆய்­வுக் குழுக்­கள் சிறு­நீ­ரகக் கோளா­று­கள் குறித்த இந்த ஆய்வை மேற்­கொண்­ட­தா­க­ அந்த இயக்­கு­ந­ர­கம் கூறி­யுள்­ளது.