தேரோட்டத்திற்கு அனுமதி கோரி மனு; வாட்ஸ்அப் மூலம் விசாரித்து நீதிபதி தீர்ப்பு

தர்மபுரி: தேரோட்டத்துக்கு அனு­மதி அளிக்­கக்கோரி தாக்­கல் செய்­யப்­பட்ட மனுவை வாட்ஸ்அப் மூலம் விசா­ரித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது சென்னை உயர் நீதி­மன்­றம். தேர்த் திரு­வி­ழாவை நடத்த வேண்­டி­யது அரசின் கடமை என்று நீதி­பதி கூறினார்.

தர்­ம­புரி மாவட்­டம், பாப்­பா­ரப்­பட்­டி­யில் உள்ள வர­த­ராஜ சுவாமி கோவில் தேர்த் திரு­வி­ழாவை நடத்த அண்­மை­யில் தடை ­வி­திக்­கப்­பட்­டது. அங்கு தேர் வலம் வரும் சாலை­களை தமி­ழக அற­நிலைய­த்­துறை ஆய்­வா­ளர் நேரில் பார்­வை­யிட்­டார். அப்­போது தேரோ­டும் பாதை குறு­க­லாக இருப்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். மேலும், அங்­குள்ள மின் கம்­பங்­கள் சாலை­யின் உள்­பக்­க­மாக அமைந்­துள்­ளது ஆபத்­தா­னது என்­றும் அவர் கூறி­னார். தவிர, மின்­கம்­பி­கள் தேரின் உய­ரத்­தை­விட தாழ்­வாக உள்­ள­தை­யும் கவ­னித்த ஆய்­வா­ளர், தேர்த் திரு­வி­ழாவை நடத்த அனு­ம­திக்க இய­லாது என்று திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

தேர்த் திரு­வி­ழாவை நிறுத்­து­வதற்­கான உத்­த­ரவு கடந்த 13ஆம் தேதி வெளி­யி­டப்­பட்­டது. இதை ஏற்க மறுத்த கோவி­லின் பரம்­பரை அறங்­கா­வ­லர் சீனி­வா­சன் என்­பவர் உயர் நீதி­மன்­றத்தை அணுகி­னார். அவர் தாக்­கல் செய்த அவ­சர மனு­வில், கடந்த 80 ஆண்­டு­களாக தேர்த் திரு­விழா நடை­பெற்று வரு­கிறது என்­றும் தேர் வலம் பாதை­யில் எந்­த­வித பாது­காப்பு குறை­பா­டு­களும் இல்லை என்­றும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அர­சுத் தரப்­பில் பல்­வேறு துறை­க­ளி­டம் இருந்து தேரோட்­டத்­துக்­கான உரிய அனு­ம­தி­கள் பெறப்­பட்­டுள்­ள­தா­க­வும் சீனி­வா­சன் தமது மனு­வில் தெரி­வித்து இருந்­தார். அண்­மை­யில் தஞ்­சை­யில் தேரோட்­டத்­தின்­போது நிகழ்ந்த விபத்தை அடுத்து வர­த­ராஜ சுவாமி கோவில் தேரோட்­டத்­துக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் வாதிடப்பட்டது. அசம்பா விதங்­க­ளைத் தவிர்க்­கவே திரு­விழாவை நிறுத்­தும்­படி உத்­த­ர­விட்டுள்­ள­தாக அர­சுத் தரப்பு வாதிட்­டது.

வாட்ஸ்அப் மூலம் இரு தரப்பு வாதங்­க­ளை­யும் செவி­ம­டுத்த நீதி­பதி, தேரோட்டத்தை நிறுத்­தும்­படி உத்­த­ர­விட அற­நி­லையத் துறை ஆய்­வா­ள­ருக்கு அதி­கா­ரம் இல்லை என்­றார்.

மேலும், தேர்த் திரு­வி­ழாவை சுமு­க­மா­க­வும் பாது­காப்­பு­ட­னும் நடத்த வேண்­டும் என்று தமது உத்­த­ர­வில் குறிப்­பிட்ட நீதி­பதி, தேரோட்­டத்தை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்­டி­யது அறநிலையத்துறை யின் கடமை என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!