ஒன்பது மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு

ஒன்பது மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு

1 mins read
46478179-1074-4ba2-bcac-a9d447fd124d
-

சென்னை: தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு கண்டுள்ளது.

அதிக நுகர்வே இதற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

காஞ்சிபுரம், தஞ்சை, நாகப்பட்டினம், அரியலுார், ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளதை மாநில நில, மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் 2020ஆம் ஆண்டைவிட நிலத்தடி நீர் கையிருப்பு அதிகரித்து உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.