சுகாதாரத்துறை: 12.9 மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை
சென்னை: தமிழகத்தில் இன்னும் 12.9 மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுமார் 1.22 மில்லியன் பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியான வர்கள் என்றும் அவர்களில் 60 வயதைக் கடந்த முன்கள, மருத்துவப் பணியாளர்களில் 50 விழுக்காட்டினர் அதை போட்டுக்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் இரண்டு நாள் கடையடைப்பு
ஈரோடு: நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோடு மாவட்டத் தில் இரண்டு நாள் கடையடைப்புப் போராட்டம் நேற்று தொடங்கியது. இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி, வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் அதனால், ஐநூறு கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நூல் விலை உயர்வை தமிழக அரசியல் கட்சிகளும் கடுமையாகக் கண்டித்துள்ளன.
'உதயநிதி அமைச்சராவது குறித்து முதல்வர் விரைவில் முடிவெடுப்பார்'
புதுக்கோட்டை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும் என திமுகவினர் விரும்புவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு உதயநிதியின் பிரசாரமும் ஒரு காரணம் என்று புதுக்கோட்டை யில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார். "உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும் என நானும் விருப்பம் தெரிவித்துள்ளேன். எனினும், முதல்வர்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். அவர் விரைவில் முடிவெடுப்பார்," என்றார் அமைச்சர் மெய்யநாதன்.
புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர்
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு ரோம் நகரில் நடைபெற்ற விழாவில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. போப் பிரான்சிஸ் இப்பட்டத்தை வழங்கி னார். இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் தேவசகாயம் ஆவார். அவர் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்தவர். புனிதர் பட்டம் வழங்கப்பட்ட விழாவில் கத்தோலிக்க அருட்சகோதரிகள் ஆறு பேர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடினர்.
நடிகை கணவரிடம் மீண்டும் விசாரணை
சென்னை: தொலைக்காட்சி நடிகை சித்ரா மரணம் தொடர்பாக, அவரது கணவர் ஹேம்நாத்திடம் காவல்துறை மீண்டும் விசா ரணை நடத்த உள்ளது. தேவைப்பட்டால் சித்ராவின் பெற்றோரி டம் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை வட் டாரங்கள் தெரிவிக்கின்றன. சித்ராவின் மரணத்தில் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக ஹேம்நாத் அண்மையில் கூறியிருந்தார்.

