'ரூட் தல' விவகாரத்தால் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல்

'ரூட் தல' விவகாரத்தால் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல்

2 mins read
ec5d6f3f-b7f7-4065-ac2d-119e67392eda
-

சென்னை: கல்­லூரி மாண­வர்­கள் இரு குழுக்­க­ளா­கப் பிரிந்து பயங்­கர ஆயு­தங்­க­ளு­டன் மோதிக் கொண்­ட­தால் சென்­னையை அடுத்­துள்ள பூந்­த­மல்லி பகு­தி­யில் பதற்­றம் நில­வி­யது. இது தொடர்­பாக காவல்­துறை ஐந்து மாண­வர்­க­ளைத் தடுத்து வைத்து, விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

இந்த மோத­லுக்கு 'ரூட் தல' விவ­கா­ரம்­தான் கார­ணம் எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

பேருந்து அல்­லது ரயில் மூலம் குறிப்­பிட்ட வழித்­த­டத்­தில் தின­மும் கல்­லூ­ரிக்­குப் பய­ணம் மேற்­கொள்­ளும் மாண­வர்­களில் ஒரு­வர் தமக்­குத் தலை­மைப் பண்பு இருப்­ப­தா­கக் கூறிக்­கொண்டு, தன்­னைத் தானே அவர்­க­ளின் தலை­வ­னாக அறி­வித்­துக்­கொள்­வார். இதை ஏற்­றுக்­கொள்­ளும் மாண­வர்­கள் அவரை 'ரூட் தல' எனக் குறிப்­பி­டு­கி­றார்­கள். அதா­வது அக்­கு­றிப்­பிட்ட வழித்­த­டத்­துக்கு மட்­டும் அவர் தலை­வர்.

இந்­நி­லை­யில் சென்­னை­யில் உள்ள பச்­சை­யப்­பன் கல்­லூரி மாண­வர்­கள் மத்­தி­யில் 'ரூட் தல' பிரச்­சினை பல ஆண்­டு­க­ளாக நீடித்து வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் திருத்­தணி, பூந்­த­மல்லி செல்­லும் பேருந்து வழித்­த­டத்­துக்கு யார் தலை­வர் என்­பது தொடர்­பாக அக்­கல்­லூ­ரி­யைச் சேர்ந்த மாண­வர்­கள் இரு குழுக்­க­ளா­கப் பிரிந்து வாக்­கு­

வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். பின்­னர் வாக்­கு­வா­தம் முற்­றி­ய­தில் கை

க­லப்பு ஏற்­பட்­டது.

அப்­போது மாண­வர்­களில் சிலர் போக்­கு­வ­ரத்து பர­ப­ரப்­பாக உள்ள சாலை­யில் மோதிக்­கொண்ட தக­வல் கிடைத்­ததை அடுத்து, காவல்­து­றை­யி­னர் அங்கு விரைந்­த­னர்.

மேலும், அந்­தக் கல்­லூ­ரி­யின் நுழைவு வாயி­லில் காவ­லர்­கள் குவிக்­கப்­பட்­ட­னர்.

கல்­லூ­ரி­யின் பின்­பு­றம் உள்ள மற்­றொரு நுழை­வு­வா­யி­லுக்கு மின்­சா­ரக் கம்­பத்­தின் கீழ் இரண்டு பைகள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருப்­பதை கண்­டு­பி­டித்த காவல்­

து­றை­யி­னர், அவற்­றுள் பட்­டாக்­கத்தி உள்­ளிட்ட பயங்­கர ஆயு­தங்­களும் காலி மதுப்­புட்­டி­களும் இருப்­ப­தைக் கண்டு அதிர்ச்சி அடைந்­த­னர்.

இதற்­கி­டையே, நேற்று முன்­

தி­னம் மதி­யம் கல்­லூரி வளா­கத்­துக்­குள்­ளும் மாண­வர்­க­ளுக்கு இடையே மோதல் வெடித்­தது. ஒரு­வ­ரை­யொ­ரு­வர் சர­மா­ரி­யா­கத் தாக்­கிக் கொண்­ட­னர். அப்­போது சில மாண­வர்­கள் ஆயு­தங்­கள் மறைத்து வைக்­கப்­பட்ட பைகளை எடுக்க ஓடி­வந்­த­னர். அவர்­க­ளைக் காவ­லர்­கள் மடக்­கிப்­பி­டித்­த­தால் கல்­லூ­ரிக்­குள் ஆயு­தங்­க­ளைக் கொண்டு செல்ல முடி­ய­வில்லை.

இத­னால் பெரிய அசம்­பா­வி­தங்­கள் ஏதும் நிக­ழ­வில்லை என்று குறிப்­பிட்ட காவல்­து­றை­யி­னர், பிடி­பட்ட மாண­வர்­கள் மீது கடும் ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்க கல்­லூரி நிர்­வா­கத்­தி­டம் கேட்­டுக் கொண்­ட­னர்.