சென்னை: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை குரங்கு, முள்ளம்பன்றி உள்ளிட்ட விலங்குகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
பயணி ஒருவர் அவற்றை அட்டைப்பெட்டியிலும் துணியால் செய்யப்பட்ட கூடைக்குள்ளும் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார்.
திங்கட்கிழமை அதிகாலை தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து சென்னை வந்தடைந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட அனைவரும் சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவரது உடைமைகளைச் சோதனையிட்டபோது, ஓர் அட்டைப் பெட்டியிலும் துணியால் செய்யப்பட்ட கூடைக்குள்ளும் வெள்ளை நிற முள்ளம்பன்றி, டாமரின் மங்கி எனப்படும் அரிய வகை வெளிநாட்டு குரங்குக் குட்டியையும் அவர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
விலங்குகளை விமானத்தில் கொண்டு வருவதற்கு முறையாக அனுமதி பெறாத நிலையில், அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும் அந்த ஆடவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார்.
இதையடுத்து, அந்த விலங்கு
களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திய வன விலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த விலங்குகள் மீண்டும் தாய்லாந்துக்கே திருப்பி அனுப்பப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

