நித்யானந்தா: என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்

நித்யானந்தா: என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்

2 mins read
8e9e1d8e-8bcb-4bcb-b9bc-1d509c4c9a4f
-

சென்னை: தமக்கு எந்­த­வித நோயும் இல்லை என்­றும் தமது உடல்­நிலை குறித்து சீடர்­கள் கவ­லைப்­பட வேண்­டாம் என்­றும் நித்­யா­னந்தா கூறி­யுள்­ளார்.

கடந்த சில தினங்­க­ளாக அவ­ரது உடல்­நிலை குறித்து பல்­வேறு தக­வல்­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன.

இதை­ய­டுத்து தாம் சமாதி நிலை­யில் இருப்­ப­தா­க­வும் வதந்­தி­களை நம்ப வேண்­டாம் என்­றும் சில தினங்­க­ளுக்கு முன்பு சமூக ஊட­கங்­கள் வழி தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் தமது உடல் பாகங்­கள் அனைத்­தும் சரி­யாக வேலை செய்­வ­தாக நேற்று முன்­தி­னம் அவர் மேலும் தமது சமூக ஊட­கப் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எனக்கு புற்றுநோய் அல்­லது கட்டி எது­வும் இல்லை, இதயப் பிரச்­சினை எது­வும் இல்லை. கொழுப்பு, கல்­லீ­ரல் பிரச்­சினை, ரத்த அழுத்­தம், நீரி­ழிவு நோய் என எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்லை. அனைத்து உள் உறுப்­பு­களும் சரி­யாக வேலை செய்­கின்­றன," என்று தமது பதி­வில் நித்­யா­னந்தா தெரி­வித்­துள்­ளார்.

27 மருத்­து­வர்­கள் தமக்கு சிகிச்சை அளித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், அலோ­பதி மருத்­துவ முறை­யின் மூலம் தமக்கு சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

"ஒரே விஷ­யம், என்­னால் உணவு உட்­கொள்ள முடி­ய­வில்லை. நான் எந்த உண­வை­யும் வாயில் தள்ள முயன்­றால் சில நிமி­டங்­களில் வாந்தி எடுக்­கும் நிலை உள்­ளது. மேலும் எனக்கு உறக்­க­மும் வர­வில்லை. உட­லில் எந்த இயக்­க­மும் தன்­னிச்­சை­யாக நடக்­க­வில்லை.

"என்னைக் கவ­னித்துக்கொண்­டி­ருக்­கும் மருத்­து­வர்­கள், சீடர்­கள் என்னை கீழே படுக்க வைத்து நன்­றாக மூச்சு விடும்­படி வற்­பு­றுத்­து­கி­றார்­கள். ஆறு மாதங்­க­ளுக்கு மேலாக உணவு மற்­றும் உறக்­கம் இல்­லா­மல் இவ்­வாறு நிர்விகல்ப சமா­தி­யில் இருப்­பது எனக்கு வழக்­க­மா­ன­து­தான். எனவே சீடர்­கள் என் உடல்நிலை பற்றி கவ­லை­ப­டத் தேவை­யில்லை," என நித்­யா­னந்தா தெரி­வித்­துள்­ளார்.

நித்­யா­னந்தா கைலாசா என்ற தீவை விலைக்கு வாங்கி அங்கு வசித்து வரு­வ­தாக அவ­ரது தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு சிறிய விமான நிலை­யம் உள்­ளது. தமது மருத்­துவ பரா­ம­ரிப்­பிற்­கா­கவோ அல்­லது தேவைப்­படும் மருத்­துவ இயந்­தி­ரங்­க­ளுக்­கா­கவோ யாரும் பணம் அனுப்­பத் தேவை இல்லை என்­றும் தம் உடல்­ந­ல­னைக் கவ­னித்து கொள்­வ­தற்கு ஏற்­கெனவே சீடர்­கள் போது­மா­ன­தை­விட அதி­க­மாக வழங்கி உள்­ள­தா­க­வும் நித்­யா­னந்தா கூறி­யுள்­ளார்.

"எனக்கு இந்த உல­கில் வாழ ஆசை­யும் இல்லை. இந்த உல­கத்தை விட்டு வெளி­யே­றும் வெறுப்­பும் இல்லை," என்று நித்­யா­னந்தா மேலும் தெரி­வித்­துள்­ளார்.