மூன்றாம் மொழியை விருப்ப மொழியாக கற்கலாம்: அமைச்சர் தகவல்
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாம் மொழியை விருப்ப மொழியாக கற்கும் முறையை அறிமுகப்படுத்த இருப்ப தாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள் ளார். அரசுப் பள்ளி மாணவர்கள் வேறு மொழியைக் கற்க விரும்பினால், விதிகளின்படி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். "தமிழக கல்வி முறையில் இந்தி கட்டாய மொழியாக இருக்க முடியாது என்பதை மட்டுமே நாங்கள் திட்டவட்டமாகக் கூறி வருகிறோம்," என்று பேட்டி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இந்தோனீசியாவில் உயிருக்குப் போராடும் தமிழக மீனவரை மீட்க கோரிக்கை
நாகர்கோவில்: இந்தோனீசியாவில் சுயநினைவை இழந்து உயிருக்குப் போராடும் குமரியைச் சேர்ந்த மீனவர் மரியஜெசின்தாசை மீட்க வேண்டும் என அவரது குடும்பத்தார் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மரியஜெசின்தாஸ் உட்பட எட்டு மீனவர்கள் அந்தமானில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது, கடல் எல்லையைக் கடந்ததாகக் கூறி, இந்தோனீசிய கடற்படையால் கடந்த மார்ச் 7ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அங்கு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மரியஜெசின்தாசின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அவர் மருத்துவ மனையில் சுயநினைவின்றி உள்ளார்.
கல்குவாரி விபத்து: நான்காவது தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார்
நெல்லை: கல்குவாரி விபத்தின்போது பாறை இடுபாடுகளில் சிக்கிய நான்காவது தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் இருவரைக் காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் களமிறங்கி உள்ளனர். கடந்த 14ஆம் தேதி நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்ததில், அங்கு பணியில் இருந்த ஆறு தொழிலாளர்கள் பாறை இடி பாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் மூவர் மீட்கப்பட்ட னர். இந்நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

