துணை அதிபர்: இந்திய வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்

துணை அதிபர்: இந்திய வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்

1 mins read
baa43a65-c96f-40ac-b312-70ca9974631e
-

நீலகிரி: இந்தியா மிக சிக்கலான, கணிக்க முடியாத புவி அரசியல் சூழலில் பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளதாக துணை அதிபர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

எனவே எந்த வித பாதுகாப்பு அச்சுறுத்த லையும் முறியடிக்க இந்திய ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரி நிகழ்வில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

"நமது அணுகுமுறை எப்போதும் அமைதியான, பயங்கரவாதமற்ற சூழலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறை யாண்மைக்குச் சவால்விடும் எந்தவொரு முயற்சியையும் நமது பாதுகாப்புப் படைகள் துணிச்சலுடனும் தீவிரமாக வும் எதிர்கொள்ளும்," என்றார் துணை அதிபர் வெங்கையா நாயுடு.

தற்போது போர்கள் போர்க்களங்களில் மட்டும் நடத்தப்படுவதில்லை என்றும் மாறாக இணையம், தகவல் ஊடகத்திலும் போர்கள் நடத்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

"ஆளில்லா சிறிய வானூர்திகள், விண்வெளி அடிப்படையிலான போர் முறைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, நமது பாதுகாப்புத்துறை புதிய, வளர்ந்து வரும் போர் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். வீரர்களும் தங்களது திறன்களை மேம்படுத்த வேண்டும்," என்றார் துணை அதிபர்.