தலைக்கவசம் அணியாததால் சென்னையில் கடந்த ஐந்து மாதங்களில் 98 பேர் பலி

தலைக்கவசம் அணியாததால் சென்னையில் கடந்த ஐந்து மாதங்களில் 98 பேர் பலி

1 mins read
0953cc37-a22c-4741-a997-17edc5bc2ac5
-

சென்னை: தலைக்­க­வ­சம் அணி­யா­த­தால் உயி­ரி­ழப்­போர் எண்­ணிக்கை சென்­னை­யில் அதி­க­ரித்­துள்­ள­தாக போக்­கு­வ­ரத்து காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஐந்து மாதங்­களில் மட்­டும் 98 பேர் இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக அறிக்கை ஒன்­றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நடப்­பாண்­டில் ஜன­வரி 1ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை­யி­லான கால­கட்­டத்­தில் இரு­சக்­கர வாக­னங்­களில் சென்ற 841 பேர் விபத்­தில் சிக்கி காயம் அடைந்­துள்­ள­னர்.

இவர்­களில் தலைக்­க­வ­சம் அணி­யாத 80 வாக­ன­மோட்­டி­களும் வாக­னத்­தின் பின்­னி­ருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்த 18 பேரும் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

விபத்­தில் சிக்­கி­ய­வர்­களில் 714 பேர் வாக­ன­மோட்­டி­கள் என்­றும் 127 பேர் பின்­னி­ருக்­கை­யில் அமர்ந்­த­வர்­கள் என்­றும் காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஆண்­டில் நிகழ்ந்த விபத்­து­களில், சென்­னை­யில் மட்­டும் தலைக்­க­வ­சம் அணி­யா­மல் சென்ற 611 பேர் மாண்­டு­விட்­ட­னர். 3,294 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர்.

உயி­ரி­ழந்­த­வர்­களில் 477 பேர் இரு­சக்­கர வாக­ன­மோட்­டி­கள் என்­றும் 134 பேர் வாகன பின்­னி­ருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்­த­வர்­கள் என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.

விபத்­தில் சிக்கி காய­ம­டைந்­த­வர்­களில் 2,929 பேர் வாக­ன­மோட்­டி­கள் என்­றும் 365 பேர் பின்­னி­ருக்­கை­யில் பய­ணித்­த­வர்­கள் என்­றும் காவல்­துறை கூறி­யுள்­ளது.

விபத்­து­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதிக எண்­ணிக்­கை­யில் பதி­வாகி வரும் நிலை­யில், இரு­சக்­கர வாக­ன­மோட்­டி­கள் மட்­டு­மல்­லா­மல், உடன் செல்­ப­வர்­களும் தலைக்­க­வ­சம் அணிய வேண்­டி­யது கட்­டா­யம் என்று போக்­கு­வ­ரத்து காவல்­துறை அறி­வு­றுத்தி உள்­ளது.

இல்­லை­யெ­னில், கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என­வும் எச்­ச­ரித்­துள்­ளது.