தமிழகத்தில் மின் கட்டமைப்பு வசதிகள் ரூ.10,789 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

சென்னை: தமி­ழ­கத்­தில் மின்­வி­நி­யோ­கம் சீராக இருப்­பதை உறுதி செய்ய மத்­திய அரசு உத­வி­யு­டன் ரூ.10,790 கோடி­யில் மின்­கட்­ட­மைப்பு வச­தி­கள் மேம்­ப­டுத்­தப்­பட உள்­ளன.

நாடு முழு­வ­தும் மின்­சா­ரம் சீரான முறை­யில் விநி­யோ­கிக்கப்­படு­வதை உறு­தி­செய்ய, மின்­கட்­ட­மைப்பை மேம்­ப­டுத்­தும் பணி ரூ.3.03 லட்­சம் கோடி செலவில் நிறை­வே­று­கிறது. இதற்காக தமிழகத்­துக்கு ரூ.10,790 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

அதில், ரூ.8,600 கோடி மத்­திய அரசு சார்­பில் கட­னாக வழங்­கப்­படும் என்­றும் இந்­தப் பணி­களை ஐந்து ஆண்­டு­க­ளுக்­குள் முடித்­து­விட்­டால் மத்­திய அரசு வழங்­கும் கடன் தொகை­யில் 60 விழுக்­காடு மானி­ய­மா­கக் கரு­தப்­படும் என்­றும் மத்­திய அர­சுத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் கடந்த இரு தினங்­க­ளாக மழை பெய்து வரு­வ­தால் மின்­நு­கர்வு குறைந்­துள்­ளது என மின்­சா­ரத்­துறை அமைச்­சர் செந்­தில் பாலாஜி தெரி­வித்­துள்­ளார்.

மேலும், தமி­ழ­கத்­தில் ஆறு நாள்­க­ளுக்கு நிலக்­கரி கையி­ருப்­பில் உள்­ள­தாக கரூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார். இனி­வ­ரும் காலங்­களில் மின் உற்­பத்தி வீணா­வதை தடுத்து உபரி மின்­சா­ரத்­தைப் பிற மாநி­லங்­க­ளுக்கு அளிக்க அரசு திட்­ட­மிட்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்ட அவர், அடுத்த ஐந்து ஆண்­டு­களில் தமி­ழ­கத்­தின் மின் உற்பத்தி 50 விழுக்­காடு அதி­க­ரிக்­கும் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!