'ஜெய்பீம்' சர்ச்சை: சூர்யா மீது வழக்குப்பதிவு

'ஜெய்பீம்' சர்ச்சை: சூர்யா மீது வழக்குப்பதிவு

1 mins read
e3c4b72a-22f5-4420-8176-fd04a619be70
சூர்யா. படம்: ஊடகம் -

சென்னை: 'ஜெய்­பீம்' திரைப்­ப­டம் குறிப்­பிட்ட ஓர் பிரி­வி­ன­ரின் மத உணர்­வு­க­ளுக்கு எதி­ராக உள்­ள­தாக அளிக்­கப்­பட்ட புகா­ரின் பேரில் அப்­ப­டத்­தின் நாய­கன் சூர்யா, இயக்­கு­நர் ஞான­வேல் மீது சென்னை காவல்­துறை வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளது.

அப்­ப­டத்­தில் இடம்­பெற்­றுள்ள சில காட்­சி­கள் உள்­நோக்­கத்­து­டன் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீருத்ர வன்­னி­யர் சேவா என்ற அமைப்­பைச் சேர்ந்த சந்­தோஷ் என்­ப­வர் காவல்­து­றை­யில் அளித்­துள்ள புகார் மனு­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

கடந்த ஆண்டு வெளி­யான 'ஜெய்­பீம்' திரைப்­ப­டம் சில சர்ச்­சை­க­ளுக்கு வித்­திட்­டுள்­ளது. அந்­தப் படத்­தில் இடம்­பெற்ற சில காட்சிகள் வன்­னிய சமு­தாய மக்­களை அவ­ம­திப்­ப­தாக உள்­ளது என்று புகார் எழுந்­தது.

இது­கு­றித்து வருத்­தம் தெரி­வித்த படத்­த­ரப்பு, அக்­கு­றிப்­பிட்ட காட்­சி­களை நீக்­கி­யது. இயக்­கு­நர் ஞான­வேல் மன்­னிப்பு கோரி­யி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், ருத்ர வன்­னி­யர் சேனா என்ற அமைப்­பின் தலை­வர் சந்­தோஷ் காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளார்.

மேலும், 'ஜெய்­பீம்' படத்­தில் சாதி, மதக் கல­வ­ரங்­க­ளைத் தூண்­டும் வகை­யில் சில காட்­சி­கள் உள்­ள­தா­க­வும் இது தொடர்­பாக சூர்யா, இயக்­கு­நர் ஞான­வேல் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் கோரி, சென்னை சைதாப்­பேட்டை நீதி­மன்­றத்­தில் அவர் மனுத்­தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

அதை விசா­ரித்த நீதி­மன்­றம், சூர்யா, ஞான­வேல் மீது வழக்­குப்­பதிவு செய்து, அது தொடர்­பான விவ­ரங்­களை மே 30ஆம் தேதி நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்ய வேண்­டும் என உத்­த­ர­விட்­டது.