'விண்வெளித் துறையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு'

'விண்வெளித் துறையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு'

1 mins read
59de02fd-1925-444c-90de-de9a141fbf7b
-

பெங்களூரு: விண்வெளி ஆராய்ச்சியில் தனி யார் துறைக்கு அதிக முக்கியத்து வம் அளிக்கப்படுவதால் அத்துறை பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

இந்தியாவில் செயற்கைக் கோள் தயாரிப்பதற்கான செலவுகள் குறைவாக இருப்பதால் வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

"நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவையொட்டி கல்லூரி மாணவர்களால் 75 செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி இந்த ஆண்டு இறுதி வரை நடைபெறுகிறது. இது மட்டுமின்றி செயற்கைக் கோள் தயாரிக்கும் கல்லூரிகளிலேயே தரை கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்படுகிறது," என்றார் மயில்சாமி.

கட்டுப்பாட்டு மையங்களின் மூலம் மாணவர்கள் அதிகம் கற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட அவர், விண்வெளித்துறை மீதான மாணவர்களின் ஆர்வமும் அதிகரிக்கும் என்றார்.

தமிழகத்தின் குலசேகரப் பட்டினத்தில் ஏவுதளம் அமைக் கும் பணிகள் தொடங்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.