பேரறிவாளன் நிரபராதி அல்ல: அண்ணாமலை

சென்னை: சென்­னை­யில் வியா­ழக்­கி­ழமை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை, "உச்­ச­நீ­தி­மன்­றம் தனது சிறப்பு அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி பேர­றி­வா­ளனை விடு­தலை செய்­துள்­ளது," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "இவ்­வ­ளவு ஆண்டு காலம் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்த பிறகு, அவ­ரது நன்­ன­டத்தை கார­ண­மாக விடு­தலை செய்த உச்ச நீதி­மன்­றத்­தின் தீர்ப்பை ஏற்­றுக்­கொள்­

கி­றோம்.

"அதற்­காக அவர் நிர­ப­ராதி அல்ல, அவ­ரும் குற்­ற­வா­ளி­தான். முன்­னாள் பிர­த­மர் கொலை­யில் அவ­ரது குற்­றம் பல­முறை உறுதி செய்­யப்­பட்­டுத்­தான் தண்­டனை வழங்­கப்­பட்­டது.

"ஆனால், அவரை நிர­ப­ரா­தி­போல திமுக அரசு கொண்­டா­டு­கிறது.

"முதல்­வர், அமைச்­சர்­கள் அனை­ வ­ரும், ஒரு நிர­ப­ரா­தியை விடு­தலை செய்­வது போல கொண்­டா­டு­வது, பேசு­வது எல்­லாம் உண்­மை­யில் முதல்­வர் அர­சி­ய­லைப்­புச் சட்­டத்­தின் மீது சத்­தி­யப் பிர­மா­ணம் செய்­து­விட்­டுத்­தான் ஆட்சி நடத்­து­

கி­றாரா என்ற சந்­தே­கம் எழு­கிறது.

"பேர­றி­வா­ளன் விடு­த­லை­யைக் கொண்­டாடி ஒரு தவ­றான முன்­னு­தா­ர­ணத்தை ஏற்­ப­டுத்­து­கி­றார்­கள்," என்று அண்­ணா­மலை தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், மதி­முக பொதுச் செய­லா­ளர் வைகோவை பேர­றிவா­ளன் நேற்று முன்தினம் சந்­தித்­தார்.

தூக்­குத் தண்­ட­னை­யில் இருந்து தம்மை ஆயுள் தண்­ட­னைக்கு மாற்­றிய மூத்த வழக்­க­றி­ஞர் ராம்­ஜெத் மலா­னி­யின் உழைப்பு, அதற்கு முழு பின்­பு­ல­மாக இருந்த வைகோ­வின் பங்கு உள்­ளிட்­டவற்றை நினை­வு கூர்ந்த பேர­றி­வா­ளன், வைகோ­வுக்கு நன்றி சொன்­னார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள வைகோவின் வீட்டில் நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு நிகழ்ந் தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!