சென்னை: தமிழகத்தில் அண்மை நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. கர்நாடகாவிலும் கனமழை நீடிப்பதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் காவிரிக் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கலாம் என்பதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிருஷ் ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை ஆகிய 9 மாவட்ட ஆட்சி யர்கள் இதனைச் செய்யவேண்டும் எனவும் மத்திய நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கேரளா, கர்நாடகாவில் கனமழையால் நேற்று மேட்டூர் அணையின் நீர்வரத்து 46,000 கன அடியாக உயரலாம் என கூறியுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 5,000 கன அடியாக இருந்தது.
பின்னர் இந்த அளவு 7,500 கன அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக, கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை தீவிரம் அடைந்ததால், புதன்கிழமை வினாடிக்கு 30,000 கன அடியாக நீர்
வரத்து அதிகரித்தது.
தொடர்ந்து நீர்வரத்து அதி
கரிப்பால் ஒகேனக்கல் அருவியிலும் ஆற்றிலும் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் சுற்றுலாப் பயணி
களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 50,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது.
இதனால் ஒகேனக்கல் அருவிக்குச் செல்லும் நடைமேடை, பிரதான அருவிகள் மற்றும் பாறைகளை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வரலாற்றில் கோடைகாலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
இதனால் காவிரி ஆற்றில் ஊட்ட மலை, ஆலம்பாடி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளில் காவல் துறை யினர், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொட்டித் தீர்த்த மழையால் காவிரி ஆற்றில் முதல்முறை நிகழ்ந்த அதிசயம்

