வேலுமணி வழக்கு விசாரணைக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம்
சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி தன்னுடைய சகோதரர்கள், உறவினர்களுக்கு டெண்டர்களை முறை கேடாக ஒதுக்கிய வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஊழல் வழக்கில் 10 வாரங்களில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்டது. எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையைத் தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பழங்குடியினருடன் நடனம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகை யில் 124ஆம் ஆண்டு மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முன்ன தாக, உதகை செல்லும் வழியில் மு.க.ஸ்டாலினுக்கு மந்து என்ற இடத் தில் தோடர் பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பளித்த னர். அப்பொழுது வாகனத்தில் இருந்து இறங்கிய தமிழக முதல்வர், தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்றபடி நடனமாடினார்.
காப்பியடிக்க அரை கிலோ 'பிட்'
நாமக்கல்: தோ்வு மையத்தில் காப்பி அடிக்க முயன்ற,
பிளஸ் 2 மாணவ, மாணவிகளிடம் இருந்து ஏராளமான விடை நகல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து அரசுத் தோ்வுகள் இணை இயக்குநா் பொன்.குமாா் கூறுகை யில், "நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஜிடிஆா் உண்டு உறைவிடப் பள்ளியில் காப்பி அடிப்பதற்காக மாணவா்கள் வைத்திருந்த அரை கிலோ விடை நகல்கள் பறிமுதல் செய்யப் பட்டன. அங்குள்ள ஜெராக்ஸ் கடையில் இருந்து விடை நகல்களை சிறிதாக்கி மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்தது தெரியவந்தது. குமாரபாளையம், பள்ளிபாளையத்தி லும் இதே தவறு கண்டறியப்பட்டது. காப்பி அடிப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவா் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும்," என்றாா். இச்சம்பவம் தொடர்பாக 11 தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வுப் பணி யிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்ச அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை
திருச்சி: விவசாயப் பணிகளுக்காக அரசு மானிய விலை யில் டிராக்டர் வாங்க திருச்சி லிங்கம் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ரூ.22,500 லஞ்சம் வாங்க முயன்ற குளித்தலை வேளாண் பொறியியல் உதவிப் பொறியாளர் கார்த்திக், 29, கையும் களவுமாகப் பிடிபட்டார். இவ்வழக்கை விசாரித்து வந்த கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடு வர் நீதிமன்றம் நேற்று கார்த்திக்குக்கு ஐந்தாண்டு கடுங் காவல் சிறையும் ரூ.25,000 அபராதமும் விதித்தது.
யானைகளுக்கு சுரங்கப் பாதை
சென்னை: மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார். செய்தியாளர் களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி ரயில் நிலை யங்கள் முழுவதுமாக ரூ.760 கோடி செலவில் புனரமைக்கப் பட உள்ளதாகக் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில், "தெற்கு ரயில்வே தண்டவாளங்களில் சிக்கி அதிக யானை கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனைத் தடுக்கும் வகை யில், யானைகள் தண்டவாளங்களைக் கடக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அந்தத் தண்டவாளங்கள் உயர்த்தப்பட்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்," என்றார்.
சிறுமி துன்புறுத்தல்: 17 ஆண்டு சிறை
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு தமது வீட்டிற்குப் பக்கத் தில் வசித்து வந்த எட்டு வயதுச் சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று முத்தம் கொடுத்தும் பாலியல் தொல்லை தந்தும் துன்புறுத்தியதாக காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டது. நான்காண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட் டது. மாரிமுத்துவுக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனை,
ரூ.20 ஆயிரம் அபராதம் ஆகியன விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

