ஸ்ரீவில்லிபுத்தூர்: மு.க. ஸ்டாலினுக்குப் பிறகு அவரது மகன் உதயநிதி தமிழக முதல்வர் ஆவதற்குத் தயாராக இருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், "தமிழகத்தில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு மு.க.ஸ்டாலின்தான் முதல்வர். கருணாநிதிக்குப் பின் மு.க.ஸ்டாலின் முதல்
வராகப் பொறுப்பேற்றதுபோல, அவருக்குப் பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளார். வாரிசாக இருந்தாலும் இருவரும் பல்வேறு சிரமங்
களைத் தாண்டி மேலே வந்தவர்கள்," என கூறினார்.
மேலும், "திமுகவை எதிர்த்து சண்டை போட ஆள் இல்லை. முதலில் நீங்கள் அனைவரும் (அதிமுக) ஒன்றுசேர்ந்து சண்டைக்கு வாருங்கள். தமிழகத்தில் 10 ஆண்டுகளாக கேடுகெட்ட ஆட்சி நடைபெற்றது. தற்போது நல்ல ஆட்சி நடைபெறுகிறது. ஒவ்வொருவர் குடும்பத்திலும் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். டெல்லிக்குப் பயப்படாத ஒரு தலைமை நமது தலைமை," என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

