தமிழகத்தில் உள்ள ஐந்து ரயில் நிலையங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும்

தமிழகத்தில் உள்ள ஐந்து ரயில் நிலையங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும்

1 mins read
b6319a98-5a68-4e3c-956f-3ddfe9b9f551
ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட புதிய ரயில் பெட்டிகளின் வெள்ளோட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள ஐந்து ரயில் நிலை­யங்­கள் உல­கத் தரத்­துக்கு மேம்­ப­டுத்­தப்­படும் என மத்­திய ரயில்வே அமைச்­சர் அஸ்­வினி வைஷ்­ணவ் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், எழும்­பூர், மதுரை, கன்­னி­யா­கு­மரி, ராமே­சு­வ­ரம், காட்­பாடி ஆகிய ரயில் நிலை­யங்­களை மேம்­ப­டுத்­தும் பணி திட்­ட­மிட்­ட­படி நடை­பெ­றும் என்­றார்.

"மணிக்கு 160 கிலோ மீட்­டர் வேகத்­தில் செல்­லக்­கூ­டிய இந்த ரயில்­க­ளுக்­கான பெட்­டி­கள் சென்னை, பெரம்­பூர் ஐசி­எஃப் தொழிற்­சா­லை­யில் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

"சிறந்த பயண அனு­ப­வம், மேம்­பட்ட பாது­காப்பு, அதிக பய­ணி­கள் செல்­லும் வசதி ஆகி­ய­வற்­றில் இந்­திய ரயில்வே கவ­னம் செலுத்தி வரு­கிறது," என்­றார் அமைச்­சர் அஸ்­வினி வைஷ்­ணவ்.

இதற்­காக, அனைத்து ரயில் நிலை­யங்­களும் மேம்­ப­டுத்­தப்­பட உள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், முதல் கட்­ட­மாக நாடு முழு­வ­தும் உள்ள ஐம்­பது ரயில் நிலை­யங்­கள் உல­கத்­த­ரத்­துக்கு உயர்த்­தப்­பட உள்­ளன என்­றார்.

இதற்கிடையே, தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து ரயில்வே ஊழியர்களும் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தி உள்ளார்.

இதன் மூலம் பயணிகளுடனான நல்லுறவையும் ரயில் இயக்கத்தின் மேம்பாட்டையும் உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.