காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.2,368 கோடி அரசுப் பணம் வீணாகிவிட்டதாகப் புகார்

காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.2,368 கோடி அரசுப் பணம் வீணாகிவிட்டதாகப் புகார்

2 mins read
7885e872-7e21-4e18-8b28-3fb3d48abb8c
-

சென்னை: தமி­ழக அரசு செயல்­படுத்தி வரும், முத­ல­மைச்­ச­ரின் விரி­வான மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டத்­தின் மூலம் கடந்த நான்கு ஆண்­டு­களில் மட்­டும் சுமார் 2,368 கோடி ரூபாய் வீணாகி உள்­ள­தாக புகார் எழுந்­துள்­ளது.

இந்­தத் திட்­டத்­தின் மூலம் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் காப்­பீட்டு நிறு­வ­னங்­க­ளுக்­கும் வழக்­கத்­தை­விட, பல நூறு கோடி ரூபாய் லாபம் கிடைத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது தொடர்­பாக விரி­வான விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என மது­ரை­யைச் சேர்ந்த தர­வு­கள் என்ற அமைப்­பின் நிறு­வ­ன­ரான ஆனந்­த­ராஜ் என்­ப­வர் வலி­யு­றுத்தி உள்­ளார். அவர் தக­வல் அறி­யும் உரி­மைச்­சட்­டத்­தின் கீழ் பல்­வேறு முக்­கிய தக­வல்­களை திரட்­டி­யுள்­ளார். அவற்­றின் அடிப்­ப­டை­யில் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளார்.

முத­ல­மைச்­ச­ரின் விரி­வான மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டத்­தின் மூலம் தமி­ழ­கத்­தில் உள்ள ஏழை எளிய மக்­க­ளுக்­கும் நவீன, மேம்­ப­டுத்­தப்­பட்ட மருத்­துவ சிகிச்சை கிடைத்து வரு­கிறது. அரசு, தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் மூலம் கட்­ட­ண­மின்றி இந்த சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது.

இதற்­காக காப்­பீட்டு நிறு­வ­னங்­கள், தனி­யார் மருத்­து­வ­ம­னை­களிடம் மாநில அரசு ஒப்­பந்­தம் செய்­து ­கொண்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், இத்­திட்­டத்­தின் மூலம் கடந்த 13 ஆண்­டு­களில் மருத்­து­வக் காப்­பீட்­டுக்­காக எவ்­வ­ளவு செல­வி­டப்­பட்­டுள்­ளது, அந்­தத் தொகை எவ்­வாறு பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது என்­பது குறித்து ஆனந்­த­ராஜ் விவ­ரங்­கள் சேக­ரித்­துள்­ளார்.

அதன்­படி, 13 ஆண்­டு­களில் காப்­பீட்­டுத் திட்­டத்­துக்­காக தமி­ழக அரசு செலுத்­திய தொகை ரூ.10,706 கோடி. அதில் தனி­யார் மருத்­து­வ­மனை­களுக்கு ரூ.5,736 கோடி­யும் அரசு மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு ரூ.2,602 கோடி­யும் அளிக்­க­கப்­பட்­டுள்­ளது. ரூ.8,338 கோடி இவ்­வாறு செல­வி­டப்­பட்ட நிலை­யில், மீதம் உள்ள ரூ.2,368 கோடி காப்­பீட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு வரு­மா­ன­மாக சென்று சேர்ந்­துள்­ளது என்­கி­றார் ஆனந்­த­ராஜ்.

மேலும், காப்­பீட்­டுக்­காக செலுத்­தப்­படும் பிரி­மி­யம் தொகை­யில் குள­று­ப­டி­கள் இருப்­ப­தா­க­வும் அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

2017 வரை ரூ.928 கோடி பிரிமி யம் தொகை­யா­கச் செலுத்­தப்­பட்டு வந்­தது என்­றும் அதில் ரூ.850 கோடி பயன்­ப­டுத்­தப்­பட்டு சுமார் 5 முதல் 10 விழுக்­காடு வரை காப்­பீட்டு நிறு­வ­னத்­துக்கு வரு­மா­ன­மாக சென்­றது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

என­னும் 2018ஆம் ஆண்டு இந்­தப் பிரிமி­யம் தொகை­யா­னது ஒரே­ய­டி­யாக ரூ.1,773 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.

இது முந்­தைய ஆண்­டை­விட 845 கோடி ரூபாய் அதி­கம் என்­ப­து­டன் சுமார் 900 கோடி ரூபாய் காப்­பீட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு லாப­மா­கச் சென்று சேர்ந்­துள்­ளது.

கடந்த 13 ஆண்­டு­களில் அரசு காப்­பீட்­டுத் திட்­டத்­தில் பொது­மக்­க­ளுக்கு சிகிச்சை வழங்­கி­ய­தற்­காக பயன்­ப­டுத்­தி­ய­து­போக தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு சுமார் 3,000 கோடி ரூபாய் லாபம் கிடைத்­தி­ருக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

இந்­தத் தொகை­யைப் பயன்­ப­டுத்தி, தமி­ழக அரசே எய்ம்ஸ் மருத்­து­வ­மனை தரத்­தில் இரண்டு புதிய மருத்­து­வ­ம­னை­களை நிறு­வி­யி­ருக்க முடி­யும் அல்­லது மாவட்­டம்­தோ­றும் ஒரு பன்­னோக்கு மருத்­து­வ­ம­னையை கட்­டி­யி­ருக்க முடி­யும் என்று சமூக ஆர்­வ­லர்­கள் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.