ராகுல்: மன்னிக்க கற்றுக் கொடுத்தார் என் தந்தை

ராகுல்: மன்னிக்க கற்றுக் கொடுத்தார் என் தந்தை

1 mins read
4480738b-6bbc-458c-aa9c-273c0d0b27d0
-

சென்னை: மறைந்த பிர­த­மர் ராஜீவ்­காந்­தி­யின் கொள்­கை­கள் நவீன இந்­தி­யாவை வடி­வ­மைக்க உத­வி­யது என்­றும் அவர் இரக்­க­முள்ள, கனி­வான மனி­த­ராக திகழ்ந்­தார் என்­றும் ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார்.

தனது தந்தை தொலை­நோக்கு பார்வை கொண்ட தலை­வ­ராக இருந்­தார் என்­றும் பிறரை மன்னிக்க கற்­றுக்­கொ­டுத்­த­வர் தன் தந்தை என்­றும் அவர் புக­ழா­ரம் சூட்­டி­உள்ளார்.

முன்­னாள் பிர­தமா் ராஜீவ்­காந்தி நினைவு தினம் நேற்று கடைப்­பிடிக்­கப்­பட்­டது. இதை முன்­னிட்டு டெல்­லி­யில் உள்ள அவ­ரது நினை­வி­டத்­தில் காங்­கி­ரஸ் தலைவி சோனியா, பொதுச் செய­லா­ளார் பிரி­யங்கா காந்தி உள்­ளிட்ட பலர் அஞ்­சலி செலுத்­தி­னர்.

இதை­ய­டுத்து டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள ராகுல் காந்தி, தமக்­கும் தனது சகோ­தரி பிரி­யங்­கா­வுக்கும் ராஜீவ் காந்தி அற்­பு­த­மான தந்­தை­யாக இருந்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எங்­க­ளுக்கு மன்­னிப்பு, பச்சா­தா­பத்­தின் மதிப்­பைக் கற்­றுக் கொடுத்­த­வர் என் தந்தை. நான் அவரை இழந்து தவிக்­கி­றேன், நாங்­கள் ஒன்­றா­கக் கழித்த நேரத்தை அன்­பு­டன் நினை­வில் கொள்­கிறேன்," என்று ராகுல் காந்தி தமது பதி­வில் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே ராஜீவ் கொலை வழக்­கில் இருந்து விடு­தலை செய்­யப்­பட்­டுள்ள பேர­றி­வா­ளன், தாம் சிறைப் பள்­ளிக்­கூ­டத்­தில் படித்­த­தா­க­வும் பிறகு சிறை­வா­சி­க­ளுக்கு வகுப்­பு­கள் நடத்தி கற்­பித்­துக் கொடுத்­த­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

"19 வய­தில் சிறைக்குச் சென்ற நான், 31 ஆண்டுகள் கழித்து தற்­போது வெளி உலகை காண்­கி­றேன். இது புது உல­க­மாகத் தெரி­கிறது. நான் சட்­டப்­ப­டிப்பை மேற்­கொள்ள விரும்­பு­கி­றேன்," என்று பேர­றி­வாளன் தெரி­வித்­துள்­ளார்.