தின­மும் ரூ.500 கோடி வர்த்­த­கம் பாதிப்பு; லட்­சக்­க­ணக்­கா­னோர் வாழ்­வா­தா­ரம் கேள்­விக்­குறி ஜவுளி உற்­பத்­தி­யா­ளர்­கள் 15 நாள் வேலை நிறுத்­தம்

திருப்­பூர்: நூல் விலை உயர்­வைக் கட்­டுப்­ப­டுத்த வலி­யு­றுத்தி தமி­ழக ஜவுளி உற்­பத்­தி­யா­ளர்­கள் நேற்று முதல் வேலை நிறுத்­தப் போராட்­டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் ஜூன் மாதம் 5ஆம் ேததி வரை 15 நாள்களுக்கு இந்­தப் போராட்­டத்தை தொடர உள்­ள­தா­க­வும் ஜவுளி உற்­பத்­தி­யா­ளர்­கள் தெரி­வித்துள்­ள­னர்.

பருத்­திப் பஞ்சு, நூலின் விற் பனை விலை ஒரு சீரான நிலைக்கு வரும் வரை மாநி­லம் முழு­வ­தும் 400 நூற்­பா­லை­களில் உற்­பத்தி நிறுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் அவர்­கள் அறி­வித்­துள்­ள­னர்.

அவர்­க­ளது இந்­தப் போராட்­டத் தால் ஒவ்­வொரு நாளும் ரூ.500 கோடி அள­வுக்கு வர்த்­த­கம் பாதிக் கப்­படும் சூழ­ல் நிலவி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அத்துடன், இரண்டு லட்­சம் விசைத்­த­றி­கள் முடங்­கும் அபா­யம் ஏற்­பட்­டுள்ள நிலை­யில், இதில் பணி­ யாற்­றும் லட்­சக்­கணக்­கான கூலித் தொழிலாளர்­களின் வாழ்­வா­தா­ர­மும் கேள்­விக்­குறி ஆகி­யுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மாநி­லத்தில் கடந்த ஐந்து மாதங்­க­ளா­கவே பஞ்சு விலை உயர்­வால், சிறுசிறு நூற்­பா­லை­கள் பெரும் பாதிப்­புக்கு ஆளாகின.

கடந்த ஜன­வரி மாதம் ரூ.328 ஆக இருந்த ஒரு கிலோ நூலின் விலை இப்­போது ரூ.389 ஆக உள்­ளது. இதைக் கணக்­கி­டும்­போது சிறு நூற்­பா­லை­க­ளுக்கு ஒரு கிலோ­விற்கு ரூ.50 முதல் ரூ.60 வரை நஷ்­டம் ஏற்­ப­டு­கிறது.

இந்­தப் பஞ்சு, நூல் விலை உயர்­வைக் கட்­டுப்­ப­டுத்த மத்­திய அரசு நட­வ­டிக்­கை­ எதுவும் எடுக்­கா­மல் அமை­தி­யாக வேடிக்கைப் பார்த்து வரு­வ­தா­க­வும் ஜவுளி உற்­பத்­தி­யாளர்­கள் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர்.

"பருத்­திப் பஞ்சு, நூலின் ஏற்­று­ம­திக்கு தடை விதித்து, இவற்றின் விலை­யைக் கட்­டுக்­குள் கொண்டு வர நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்," என­வும் மத்­திய அர­சுக்கு கோவை, திருப்­பூர் ஜவுளி உற்­பத்­தி­யா­ளர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இதுகுறித்து தென்­னிந்­திய நூற்­பா­லை­கள் சங்­கத் தலை­வர் ஜெ.செல்­வன் வெளியிட்­டுள்ள அறிக்­கை­யில், பருத்­திப் பரு­வம் ஆரம்­பித்­த­வு­டன் பெரிய பஞ்சு வியா­பா­ரி­களும் பன்­னாட்டு நிறு­வ­னங்­களும் அதிக அள­வில் பஞ்சை கொள்­மு­தல் செய்து இருப்பு வைத்­துக்­கொண்­ட­னர். வெளி­நாட்­டிற்­கு பஞ்சு ஏற்­று­மதியும் செய்­யப்­பட்­டது. இப்­போது பஞ்சின் விலை கடு­மை­யாக உயர்ந்துவிட்­ட ­சூ­ழ­லில், இதன் விலை­ சீரா­கும் வரை சிறு நூற்­பா­லை­களை இயக்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம். இத­னால் உற்­பத்தி நிறுத்­தப்­ப­டு­கிறது," என்று கூறி­யுள்­ளார்.

இந்நிலையில், கோவை, திருப்­பூர், ஈரோடு, சேலம், மதுரை, விரு­து­ந­கர் உள்­பட பல்­வேறு மாவட்­டங்­களிலும் உள்ள 400 நூற்­பா­லை­ களில் உற்­பத்தி நிறுத்­தப்­ப­ட்டுள்ளது.

இத­னால், தின­மும் ரூ.500 கோடிக்கு வரு­வாய் இழப்பு ஏற்­படும் என்று நூற்­பாலை உரி­மை­யா­ளர்­கள் தெரி­வித்துள்ள­தாக தின கரன் ஊடகத் தகவல் குறிப்பிட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!