தஞ்சாவூர்: தஞ்சையில், சோழ மன்னர் குளித்ததாகக் கூறப்படும் 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்த தீர்த்தக் குளத்தை தூர்வாரியபோது ஏழு உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தஞ்சை கரந்தையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. 1,400 ஆண்டுகள் பழமையான இக்கோவில் அருகே சூரிய புஷ்கரணி என்று அழைக்கப்படும் குளம் உள்ளது. கருங்குஷ்ட நோயி னால் அவதிப்பட்ட மன்னன் இக்குளத்தில் குளித்தபின் குணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

