'சிறையில் மரணம் என்பதே இனி கூடாது'

'சிறையில் மரணம் என்பதே இனி கூடாது'

1 mins read
3d338ad0-cdb9-4d67-b4a9-cf7b4550720a
-

திருச்சி: தமிழ­கத்­தில் சிைறக் கூடத்தில் மரணம் என்பதே இனி நடக்கக் கூடாது. இந்த நிலையை உரு­வாக்­கு­வதே காவல்துறையின் முக்கிய இலக்கு என டிஜிபி சைலேந்­தி­ர­பாபு தெரி­வித்­துள்­ளார்.

காவல் ­நி­லைய மர­ணங்­களைத் தடுப்­பது தொடர்­பாக திருச்­சி­யில் கருத்­த­ரங்­கம் நடை­பெற்­றது. அப்போது, செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்த டிஜிபி சைலேந்­தி­ர­பாபு, "காவல்நிலை­யத்­தில் காவ­லர்­கள் தாக்­கி­ய­தால் மட்­டுமே குற்­ற­வா­ளி­கள் இறந்­ததாகச் சொல்­ல­மு­டி­யாது. உடல்­நிலை சரி­யில்­லா­மல்கூட சிலர் இறந்துவிடு­கி­றார்­கள். சிலர் உயிரை மாய்த்துக் கொள்­கி­றார்­கள். காவ­லர்­கள் குற்­ற­வாளி­களைக் கண்­ணி­ய­மா­க­வும் பாது­காப்­பா­க­வும் நடத்த வேண்­டும் என்­ப­தற்­குத்­தான் இந்தக் கருத்­த­ரங்­கம் நடத்­தப்­ப­டு­கிறது," என்றார்.