செய்­திக்­கொத்து

செய்­திக்­கொத்து

3 mins read
2d5d5e4b-7781-46e7-ba01-b6948416fd09
-

மதுவிருந்தில் இளையர் பலி

சென்னை: கோயம்பேடு வி.ஆர். மாலில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்தியது தொடர்பாக மதுபானக்கூட மேலாளர்கள் நிகாஷ், பாரதி, ஊழியர் எட்வின் ஆகியோரை காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுவிருந்தில் பங்கேற்ற இளைஞர் பிரவின் மயங்கி விழுந்து உயிரிழந்ததை அடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.

10 ரூபாய்க்கு மஞ்­சள்பை வழங்­கும் தானி­யங்கி இயந்­தி­ரம் அறி­மு­கம்

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் தானி­யங்கி இயந்­தி­ரம் மூலம் மஞ்­சள் பை விற்­பனை செய்­யப்­படும் என்று தமி­ழக அரசு ெதரி­வித்­துள்­ளது.

சுற்­றுச்­சூ­ழ­லுக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் பிளாஸ்­டிக் பைக­ளுக்கு மாற்­றாக துணிப்பை பயன்­பாட்டை ஊக்­கு­விக்­கும் வகை­யில் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் மஞ்­சள் பை தானி­யங்கி இயந்­தி­ரங்­கள் அமைக்­கப்­பட உள்­ளன.

10 ரூபாய் பணத்­தைச் செலுத்­தி­னால் இயந்­தி­ரத்­தில் இருந்து மஞ்­சள் துணிப்பை வெளியே வரும் என்று சுற்­றுச்­சூ­ழல், வனத்­துறை செய­லா­ளர் சுப்­ரியா சாகு கூறியுள்­ளார்.

தந்தை-மகனுக்கு 14 நாள்கள் சிறை

திருநெல்வேலி: நெல்லை மாவட்­டம், அடை­மி­திப்­பான் குளம் கல்­கு­வா­ரி­யில் விபத்து நடந்து ஒரு­வா­ர­மா­கி­யும் அதில் சிக்­கிய ஆறா­வது நபரை மீட்கமுடி­யா­மல் தேசி­யப் பேரி­டர் மீட்­புக் குழு­வி­னர் திணறி வரு­கின்­ற­னர். விபத்­தில் மூவர் உயி­ரி­ழந்­த­னர். இரு­வர் உயி­ரு­டன் மீட்­கப்­பட்­ட­னர். இத­னி­டையே, குவாரி உரி­மை­யா­ள­ரும் தமி­ழக காங்­கி­ரஸ் துணைத் தலை­வ­ரு­மான சேம்­பர் செல்­வ­ராஜ், அவரது மகன் குமார் ஆகி­யோரை மங்­க­ளூ­ரு­வில் நேற்று முன்­தி­னம் கைது செய்து, நெல்லை நீதி­மன்­றத்­தில் காவல்துறையினர் முன்­னி­லைப்­ப­டுத்­தினர். ­இரு­வ­ரை­யும் 14 நாள் சிறை­யில் அடைக்க நீதி­பதி திரு­வேணி உத்­த­ர­விட்­டார். இதை­ய­டுத்து, இவர்கள் திரு­நெல்­வேலி மத்­திய சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.

வாகனத்தில் பின்புறம் அமர்பவர்க்கும் தலைக்­க­வ­சம்­ கட்டாயம்

சென்னை: இரு­சக்­கர வாக­னத்­தின் பின்­பு­றம் அமர்ந்து செல்­ப­வர்­களும் கட்­டா­யம் தலைக்­க­வ­சம் அணி­ய­வேண்­டும் என்று சென்னை போலிஸ் ஆணை­யர் சங்­கர் ஜிவால் தெரி­வித்­துள்ளார். இது இன்று 23ஆம் தேதி முதல் அம­லுக்கு வரு­கிறது. தலைக்­க­வ­சம் அணி­யா­த­வர்­கள் மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

சென்­னை­யில் கடந்த ஜன­வரி முதல் மே 15 வரை­யி­லான நான்­கரை மாதத்­தில் இரு சக்­கர வாகன விபத்­தில் 98 பேர் பலி­யாகி உள்­ள­னர். இதில் தலைக்­க­வ­சம் அணி­யா­மல் வாக­னம் ஓட்­டி­ய­வர்­கள் 80 பேரும் பின்­பு­றம் அமர்ந்து பய­ணம் செய்­த­வர்­கள் 18 பேரும் அடங்­கு­வர்.

துப்­பாக்­கி­ச்சூடு சம்­ப­வம்: நான்காம் ஆண்டு நினைவுதினம் அனு­சரிப்பு

தூத்­துக்­குடி: தூத்­துக்­குடி துப்­பாக்கிச் சூட்­டில் உயிர் நீத்­த­வர்­க­ளுக்­கான 4ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனு­ச­ரிக்­கப்பட்ட நிலை­யில், பாது­காப்­புக்­காக 2,500 காவலர்கள் குவிக்­கப்­பட்டிருந்தனர். முன்­னெச்­ச­ரிக்­கை­யாக வெளி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு தூத்­துக்­கு­டிக்குள் நுழைய அனு­மதி மறுக்­கப்­பட்­டிருந்தது.

ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ரான போராட்­டத்­தில் 2018ஆம் ஆண்டு தூத்­துக்­குடி காவலர்கள் நடத்­திய துப்­பாக்­கிச் சூட்டில் 15 பேர் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர்.

எண்­ணெய் ஆலை­யில் தீவி­பத்து

விரு­து­ந­கர்: விரு­து­ந­க­ரில் எண்­ணெய் ஆலை­யில் ஏற்­பட்ட பயங்­கர தீவி­பத்­தில் ஒரு கோடி ரூபாய் மதிப்­பி­லான பொருள்­கள் சேதம் அடைந்­தன.

பாண்­டி­யன் நக­ரில் அப்­பண்ண சாமி என்­ப­வ­ருக்­குச் சொந்­த­மான அந்த ஆலை­யில் தேங்­காய் எண்­ணெய், நல்­லெண்­ணெய் உள்­ளிட்­டவை தயா­ரிக்­கப்­பட்டு வந்­தன.

வழக்­கம்­போல சனிக்கிழமை இரவு ஆலை மூடப்­பட்ட நிலை­யில், திடீ­ரென ஏற்­பட்ட தீவி­பத்­தில் ஆலை­யில் இருந்த இயந்­தி­ரங்­கள், எண்­ணெய் ஆகி­யவை சேதம் அடைந்­தன. கொழுந்­து­விட்டு எரிந்த தீ இரண்டு மணி நேர போராட்­டத்­துக்­குப் பின்னர் கட்­டுக்­குள் கொண்­டு­ வ­ரப்­பட்­டது.

சிலை­களைக் கடத்­திய ஐவர் கைது

ஈரோடு: சத்­தி­ய­மங்­க­லம் அடுத்த புளி­யம்­பட்­டி­யில் நடந்த வாகனச் சோத­னை­யின்போது, உலோகச் சிலை­களைக் கடத்­திச் சென்ற ஐவர் பிடிபட்டனர். கேரள

மாநி­லத்தைச் சேர்ந்த சசி­ராம், இஸ்­மா­யில், முக­மது, ரஷீத், ஜாகித் ஆகிய ஐவரையும் காவல்துறையினர் கைது செய்து விசா­ரித்து வருகின்றனர்.