10 ரூபாய் எலு­மிச்­சம் பழத்தை பறக்­க­விட்டு ரூ.81,000 மோசடி: மூன்று சாமியார்கள் கைது

10 ரூபாய் எலு­மிச்­சம் பழத்தை பறக்­க­விட்டு ரூ.81,000 மோசடி: மூன்று சாமியார்கள் கைது

2 mins read
b18904f4-c420-4b4b-8123-2372472b81ce
எலுமிச்சையை பறக்கவிடும் மணி. படம்: ஊடகம் -

புதுக்­கோட்டை: 10 ரூபாய் எலு­மிச்சம் பழத்தைப் பறக்­க­விட்டு புதையல் எடுத்துத் தரு­வ­தாக 81,000 ரூபாயைப் பறித்­துச் சென்ற மோசடிக் கும்­பல் சிக்­கி­யது.

மணி, முரு­கே­சன், ராசு ஆகிய மூன்று போலிச் சாமியார்களைக் கைது செய்த காவலர்கள், நீதி­மன்­றத்­தில் முன்னிலைப்படுத்தி சிறை­யில் அடைத்­த­னர்.

அவர்­க­ளி­டம் இருந்து 23 பித்­தளைச் சிலை­கள், ரூ.81,000 ரொக்­கம், இரு சக்­கர வாக­னமும் பறி­மு­தல் செய்யப்பட்டது.

புதுக்­கோட்டை மாவட்­டம், மண்­டை­யூர் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் முத்துலட்­சுமி. தனது குடும்­பத்­தில் உயி­ரி­ழப்பு, தொடர் பிரச்­சி­னை­கள் நில­வி­ய­தால் கடந்த பிப்­ர­வ­ரி­ மாதத் தில் விரா­லி­மலை அருகே வசித்து வரும் சாமி­யாடி ராசு­வி­டம் குறி கேட்­கச் சென்­றுள்­ளார்.

அப்­போது சாமி­யா­டிக்கொண்டே குறி சொன்ன ராசு, வீட்­டில் புதை­யல் உள்­ள­தா­க­வும் அதை எடுத்து வழி­பட்­டால் சிர­மங்­கள் அனைத்­தும் நீங்­கும் என்­றும் கூறி­யுள்­ளார்.

இதனை நம்பிய முத்­து­லட்­சுமி குடும்­பத்­தி­னர், ஆங்­காங்கே கடன் வாங்கி ரூ.75,000 கொடுத்து புதை­யலை எடுக்க ஏற்­பாடுகளைச் செய்­தனர். பூசை செலவுக்கும் ரூ.6,000 கொடுத்துள்ளனர்.

இதை­ய­டுத்து, ஓர் இரவு நேரத் தில் ராசுவின் நண்பர்களான மணி யும் முருகேசனும் புதை­யல் எடுப்­ப­தற்கு முன்பு பூைச­கள் செய்­த­னர்.

அப்­போது, முகம் முழுவதையும் துணியால் மறைத்துக்கொண்டு எலு­மிச்சம் பழத்தை அந்­த­ரத்­தில் பறக்கவிட்டும், பழத்தை மேலே கீழே என போகவைத்தும் தன்னை சக்தி வாய்ந்த சாமியாராக மணி நம்ப வைத்துள்ளார்.

அத­னைத்தொடர்ந்து, முத்து­லட்­சு­மி­யின் வீட்­டின் பின்­புறம் 5 அடி அளவில் பள்­ளம் தோண்­டிய அவர்கள், தாங்­கள் கொண்­டு­வந்த சிறிய சிலை­கள், செம்பு நாண­யங்­களைக் குழிக்­குள் இருந்து எடுத்­த­தாகக் கூறி முத்துலட்சுமி குடும் பத்தினரிடம் கொடுத்­தனர்.

அவர்கள் கூறியபடி, இரண்டு மாதத்­திற்கு சாணம், களி­மண்­ணிற்­குள் மூடி­வைத்து தங்கச் சிலை­களை வழி­பட்டு வந்த முத்­து­லட்­சுமி, ஒருநாள் சோதித்துப் பார்த்த போது, அனைத்­தும் பித்­தளை என்­பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

எலுமிச்சம் பழத்திற்குள் பாத ரசத்தைச் செலுத்தி குலுக்கி தரையில் போட்டால் நகரும் என்று அவர்கள் காவலர்களிடம் கூறிய தாகவும் தகவல்.