11 மாதங்களில் 800,000 புகார்கள்: அமைச்சர் தகவல்

11 மாதங்களில் 800,000 புகார்கள்: அமைச்சர் தகவல்

1 mins read
f9441c8d-19c0-4699-835f-757fbfe3224e
-

சென்னை: தமி­ழ­கத்­தின் மின் உற்­பத்­தியை அதி­க­ரிக்க பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக மாநில மின்­சா­ரம், மது­வி­லக்கு, ஆயத்­தீர்­வைத்­துறை அமைச்­சர் செந்­தில் ­பா­லாஜி தெரி­வித்­துள்­ளார்.

இதன் மூலம் தமி­ழ­கத்­தின் சொந்த மின் உற்­பத்தி 10,540 மெகா­வாட்­டாக அதி­க­ரிக்­கும் என்று கரூ­ரில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார். மின்­சா­ரம், மின் விநி­யோ­கம் குறித்து அளிக்­கப்­படும் புகார்­கள் தொடர்­பாக உட­னுக்­கு­டன் நட­வ­டிக்கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

"பொது­மக்­கள் தயக்­கம் இன்றி புகார் தெரி­விக்க ஏது­வாக மின்­ன­கம் உரு­வாக்­கப்­பட்­டது. அதன் பல­னாக, கடந்த 11 மாதங்­களில் மட்­டும் சுமார் 800,000 புகார்­கள் வந்­துள்­ளன. இதில் 99 விழுக்­காடு புகார்­க­ளுக்­குத் தீர்வு காணப்­பட்­டுள்­ளது," என்­றார் அமைச்­சர் செந்­தில்­ பா­லாஜி.

தமி­ழ­கத்­தில் 3.24 கோடி மின் இணைப்­பு­கள் உள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், காற்­றாலை மின் உற்­பத்தி அதி­க­ரித்­துள்­ள­தால், உற்­பத்­திச் செலவை ஒப்­பிட்டு அனல் மின் உற்­பத்தி குறைக்­கப்­பட்­டுள்­ளது என்­றார்.

தமி­ழக மின் தேவைக்­காக ஒப்­பந்­தங்­கள் போடப்­பட்டு மின்­சா­ரம் வாங்­கப்­ப­டு­வ­தா­க­வும் உப­ரி­யாக உள்ள மின்­சா­ரம் அண்டை மாநி­லங்­க­ளுக்கு பரி­மாற்ற முறை­யில் வழங்­கப்­ப­டு­கிறது என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

"தமி­ழக மின் நுகர்வு சரா­ச­ரி­யாக 14,500 மெகா­வாட் முதல் 17,500 மெகா­வாட் வரை உள்­ளது. இதன் சரா­சரி கணக்­கி­டப்­பட்டு தமி­ழக மின் உற்­பத்தி 4,320 மெகா­வாட் என்­பது 25 விழுக்­காடு எனக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. அடுத்த ஐந்து ஆண்­டு­களில் 6,220 மெகா­வாட் மின் உற்­பத்­திக்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன," என்­றார் அமைச்­சர் செந்­தில்­ பா­லாஜி.