58 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய தனுஷ்கோடி தரைப்பாலம் வெளியே தெரிகிறது; குவியும் சுற்றுப்பயணிகள்

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் விரைவில் செயல்படத் தொடங்கும்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பூசி மையத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கப்படும் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மத்திய அரசின் தடுப்பூசி மையம் உற்பத்திக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதாக இந்திய மருந்து விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் பேசும்போது அவர் குறிப்பிட்டார். எலிக்காய்ச்சல், தக்காளி காய்ச்சல், குரங்கம்மை குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டணியால் தமிழக காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது என்கிறார் அழகிரி

சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் கட்சியைப் பலவீனப்படுத்திவிட்டது என்பதே உண்மை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கூட்டணி அரசியல் காங்கிரசின் வளர்ச்சியைக் குறைத்து பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "ஒரு கூட்டணி வலுவாக இருந்தால், அது கட்சியையும் வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். இதைச் சொல்வது, செயல்படுத்துவது கடினம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க மிகப்பெரிய தியாகம் செய்ய வேண்டும். சில தேர்தல்களில் நாம் தோற்க நேரிடலாம். தனித்தன்மையுடன் வலிமையாக இருந்தால் மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள்," என்று கே.எஸ்.அழகிரி மேலும் கூறியுள்ளார்.

இலங்கை மக்களுக்காக மொய் விருந்து மூலம் நிதி திரட்டிய தேநீர்க் கடைக்காரர்

புதுக்கோட்டை: இலங்கை மக்களுக்காக தனது தேநீர்க் கடையில் மொய் விருந்து நடத்தி ரூ.16,000 நிதி திரட்டியுள்ளார் சிவக் குமார் (படம்). 46 வயதான இவர், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தேநீர்க் கடை நடத்தி வரு கிறார். இதற்கு முன்பு கஜா புயலால் பெரும் சேதங்களை தமிழகம் சந்தித்தபோது தனது கடையில் தேநீர், பலகாரங்களுக்காக வாடிக்கையாளர்கள் பாக்கி வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாயைத் தள்ளுபடி செய்தார் சிவக்குமார். அதேபோல் கொரோனா காலகட்டத்தில் தனது கடையில் தேநீர், பலகாரங்களை இலவசமாக வழங்கி, விருப்பப்பட்டவர்கள் அளித்த தொகை மூலம் 20 ஆயிரம் ரூபாய் திரட்டி தமிழக அரசுக்கு அளித்தார். இந்நிலையில், இலங்கை மக்களுக்காகவும் உதவிக்கரம் நீட்டியுள்ளார் சிவக்குமார். இம்முறை 16 ஆயிரம் ரூபாய் திரட்டியுள்ளார்.

சிவகங்கை, திருச்சியில் சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு

சிவகங்கை: சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் நேற்று முன் தினம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்தேறியது. திருப்பத்தூரில் உள்ள பூலாங்குறிச்சியில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், நத்தம், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. இதேபோல், திருவெறும்பூரில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 21 பேருக்கு காயம் ஏற்பட்டது.

ரூ.1,500 கோடி செலவில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்

சென்னை: 1,500 கோடி ரூபாய் செலவில் சென்னை மாநகராட்சி ப்பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளன. சென்னை மாநகராட்சி யின் 13 மேல்நிலை, ஐந்து உயர் நிலை, ஒரு நடுநிலை, 10 தொடக்கப் பள்ளி என மொத்தம் 28 பள்ளிகளில் பிரான்ஸ் பன்னாட்டு முகமை நிதியுதவியுடன் அதற்கான திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினால் 20,000 மாணவர்கள் பயன்பெறுவர்.

ராமே­சு­வரம்: கடந்த 58 ஆண்­டு­களுக்கு முன்பு கட­லில் மூழ்­கிய தனுஷ்­கோடி தரைப்­பா­லம் வெளியே தெரிந்­தது. இதை­ய­டுத்து, அங்கு சுற்­று­லாப் பய­ணி­க­ளின் வருகை அதி­க­ரித்­துள்­ளது.

அனை­வ­ரும் மிகுந்த ஆர்­வத்­து­டன் அங்கு புகைப்­ப­டங்­கள் எடுத்­துக்­கொள்­வ­து­டன், தரைப்­பா­லம் தெரி­வ­தைக் காணொ­ளி­யா­க­வும் பதிவு செய்­கின்­ற­னர்.

ராமே­சு­வ­ரத்­தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்­டர் தூரத்­தில் அமைந்­துள்ள தனுஷ்­கோடி, கடந்த 1964ஆம் ஆண்டு வரை பர­ப­ரப்­பான தொழில் நக­ர­மாக விளங்கி வந்­தது.

இலங்­கை­யின் தலை­மன்­னார் பகு­திக்கு தனுஷ்­கோ­டி­யில் இருந்து போக்­கு­வ­ரத்­துக் கப்­பல்­களும் ரயில்­களும் இயக்­கப்­பட்­டன. வளர்ந்த நக­ருக்­கு­ரிய வகை­யில் மருத்­து­வ­மனை, துறை­மு­கம், தபால் நிலை­யம், கோவில்­கள், பள்­ளி­கள் என அனைத்து வச­தி­களும் தனுஷ்­கோ­டி­யில் இருந்­தன.

இந்­நி­லை­யில், 1964ஆம் ஆண்டு டிசம்­பர் 23ஆம் தேதி வீசிய புய­லில் ஒட்­டு­மொத்த தனுஷ்­கோடி நக­ர­மும் அழிந்­து­போ­னது. புய­லுக்­குப் பின்­னர் அது மக்­கள் வாழ முடி­யாத பகு­தி­யாக மாறி­விட்­டது என இந்­திய அரசு அறி­வித்­தது.

மீன­வர்­கள் சிலர் அங்கு குடி­சை­கள் அமைத்து வசித்து வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில், புய­லில் மூழ்­கிப்­போன தரைப்­பா­லம் ஒன்று தனுஷ்­கோ­டி­யில் மீண்­டும் தென்­படு­கிறது.

இந்­தப் பாலம் கான்­கி­ரீட் குழாய்­க­ளைக் கொண்டு அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

அழிந்­து­போன நக­ரத்­தின் அடை­யா­ளக்­கூ­று­களில் ஒன்­றாக மிஞ்­சி­யுள்ள இந்­தத் தரைப்­பா­லத்தை சுற்­று­லாப் பய­ணி­கள் நேரில் வந்து பார்த்து புகைப்­ப­டம் எடுத்­துச் செல்­கின்­ற­னர். கடந்த ஒரு வாரமாக தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!