மேட்டூர் நீர்மட்டம் உயர்ந்ததால் பாசனத்துக்கு அணை திறப்பு

மேட்டூர் நீர்மட்டம் உயர்ந்ததால் பாசனத்துக்கு அணை திறப்பு

1 mins read
19bd11d4-46ff-4e05-b6c1-f3fdb4545144
-

சேலம்: காவிரி நீர்ப்­பி­டிப்­புப் பகு­தி­களில் தொடர்ந்து பெய்து வரும் கன­மழை கார­ண­மாக, மேட்­டூர் அணை­யின் நீர்­மட்­டம் 116 அடி­யாக உயர்ந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நாளை அணை­யில் இருந்து டெல்டா பாச­னத்­திற்­காக தண்­ணீ­ரைத் திறந்­து­வி­டு­கி­றார்.

நாடு சுதந்­தி­ரம் அடைந்த பிறகு, முதல் முறை­யாக கோடைக் காலத்­தில் மேட்­டூர் அணை திறந்­து­விடப்­படு­கிறது.

வழக்­க­மாக, ஒவ்­வோர் ஆண்­டும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாச­னத்­துக்­காக மேட்­டூர் அணை­யில் இருந்து தண்­ணீர் திறந்­து­வி­டப்­படும். நீர்­மட்­டம் 90 அடியை எட்­டி­விட்­டால் தண்­ணீர் திறப்­பில் மாற்­றம் இருக்­காது.

இல்­லை­யெ­னில், சில நாள்­கள் காத்­தி­ருந்து தண்­ணீர் திறந்­து­விடப்­படும்.

கடந்த 1925ஆம் ஆண்டு கட்­டப்­பட்ட மேட்­டூர் அணை­யில் இருந்து இது­வரை 18 முறை மட்­டுமே குறித்த தேதி­யில் தண்­ணீர் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் இந்த ஆண்டு கோடைக் காலத்­தி­லேயே அணை­யின் நீர்­மட்­டம் 117 சதுர அடியை எட்­டி­யுள்­ளது. அத­னால் முன்­கூட்­டியே தண்­ணீர் திறந்­து­வி­டப்­ப­டு­கிறது.

டெல்டா பாச­னத்­துக்கு வழக்­கத்­தை­விட முன்­ன­தா­கவே தண்­ணீர் திறந்­து­வி­டப்­ப­டு­வது விவ­சா­யி­களை உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ளது.

தற்­போது நாமக்­கல், கரூர், திருச்சி, தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், நாகப்­பட்­டி­னம், அரி­ய­லூர், பெரம்­ப­லூர், புதுக்­கோட்டை, மயி­லா­டு­துறை மாவட்­டங்­களில் உள்ள 491,200 ஏக்­கர், கட­லூ­ரில் 30,800 ஏக்­கர் என 12 டெல்டா மாவட்­டங்­களில் உள்ள 5.21 லட்­சம் ஏக்­கர் நிலங்­கள் பாசன வசதி பெறும்.