மேலவை எம்.பி. தேர்தல் மனுத்தாக்கல் தொடக்கம்

மேலவை எம்.பி. தேர்தல் மனுத்தாக்கல் தொடக்கம்

2 mins read
35c838ee-7b16-48b2-a6b8-586985628a8d
-

சென்னை: மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர்­கள் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு தாக்­கல் நேற்று தொடங்­கி­யது.

நாடா­ளு­மன்ற மாநி­லங்­க­ள­வை உறுப்பினர்களின் எண்­ணிக்கை 250. தமி­ழ­கத்தை சேர்ந்த 18 பேரும் இவர்­களில் அடங்­கு­வர். இந்த 18 பேரில் 6 பேரின் பத­விக்­கா­லம் ஜூன் 29ஆம் தேதி நிறை­வ­டை­கிறது.

திமு­க­வைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்­கோ­வன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என். ராஜேஸ்­கு­மார், அதி­மு­க­வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பால­சுப்­பி­ர­ம­ணி­யம், ஏ.நவ­நீ­த­கி­ருஷ்­ணன், ஏ.விஜ­ய­கு­மார் ஆகி­யோ­ரின் ஆறாண்டு பத­விக்­கா­லம் நிறை­வ­டை­கிறது.

இதே­போல், 14 மாநி­லங்­க­ளைச் சேர்ந்த 51 உறுப்­பி­னர்­க­ளின் பத­விக்­கா­ல­மும் முடி­வ­டை­கிறது. எல்­லா­வற்­றை­யும் சேர்த்து 57 இடங்­க­ளுக்­கும் புதிய உறுப்­பி­னர்­களை தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான தேர்­தல் ஜூன் 10ஆம் தேதி நடை­பெற உள்­ளது.

இந்­தத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத் தாக்­கல் நேற்று தொடங்­கி­யது. தேர்­தல் நடத்­தும் அலு­வ­ல­ரான சட்­டப்­பே­ரவை செய­லர் கி.சீனி­வா­சன், உதவி அலு­வ­ல­ரான ரமேஷ் ஆகி­யோ­ரி­டம் வேட்­பு­ம­னுக்­களை பெற்று சமர்ப்­பிக்­கு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் உள்ள தேர்­தல் அதி­கா­ரி­கள் அறை­யில் மே 31ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்­பு­ம­னுக்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். ஜூன் 1ஆம் தேதி வேட்­பு­மனு பரி­சீ­லனை. வேட்­பு­ம­னுக்­களை திரும்­பப் பெறு­வ­தற்­கான கடைசி நாள் ஜூன் 3.

ஆறு இடங்­க­ளுக்கு ஆறு பேர் மட்­டும் வேட்­பு­மனுத் தாக்­கல் செய்­தால் தேர்­த­லுக்கு அவ­சி­யம் இருக்­காது. அதி­க­மா­னோர் மனுத்­தாக்­கல் செய்­தால் ஜூன் 10 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்­குப்­ப­திவு நடை­பெ­றும். மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்­ணிக்கை நடை­பெ­றும்.

தமி­ழ­கத்­தில் கடந்த ஆண்டு நடை­பெற்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­குப் பிறகு அதி­மு­க­வின் பலம் குறைந்து, திமு­க­வின் பலம் அதி­க­ரித்­துள்­ளது. அத­னால், நடை­பெ­ற­வுள்ள தேர்­த­லில், அதி­மு­க­வி­டம் உள்ள 3 இடங்­களில் ஒன்று திமுக வசம் செல்­கிறது. அந்த ஒன்றை தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. திமுக கூட்­ட­ணி­யைச் சேர்ந்த நால்­வ­ருக்கு மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் பதவி கிடைக்­கும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

திமுக வேட்­பா­ளர்­க­ளாக தஞ்சை சு.கல்­யா­ண­சுந்­த­ரம், கே.ஆர்.என். ராஜேஸ்­கு­மார், இரா.கிரி­ரா­ஜன் ஆகி­யோர் கடந்த வாரமே அறிவிக்கப்பட்டுவிட்டனர். அதிமுக வேட்பாளர்களாக யாரை நிறுத்துவது என்பதில் அக்கட்சித் தலைமை திணறி வருகிறது. அதேபோல திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரசின் ஒரு வேட்பாளர் யார் என்பதைத் தேர்வு செய்வதில் நேற்று மாலை வரை இழுபறி நீடித்தது.

வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக, காங்கிரஸ் திணறல்