மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணை திறப்பு

1 mins read
aaa34172-f4ca-4fc7-9dda-96eaed9ba213
மேட்டூர் அணையைத் திறந்து வைத்த பின்னர் பாய்ந்தோடும் நீரை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்த்து ரசித்தார். படம்: தமிழக ஊடகம் -

சுதந்திரத்திற்குப் பின்னர் மே மாதத்தில் அணை திறக்கப்படுவது முதல்முறை

மேட்­டூர்: சேலம் மாவட்­டம் மேட்­டூர் அணை­யி­லி­ருந்து குறுவை சாகு­படி பாச­னத்­திற்­காக முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டா­லின் தண்­ணீரை மலர் தூவி திறந்து வைத்­தார்.

ஆண்­டு­தோ­றும் மேட்­டூர் அணை­யில் இருந்து குறுவை சாகு­படி பாச­னத்­திற்கு ஜூன் 12ஆம் தேதி தண்­ணீர் திறக்­கப்­படும். இந்­நி­லை­யில் காவிரி நீர்ப்­பி­டிப்பு பகு­தி­களில் பெய்த மழை கார­ண­மாக மேட்­டூர் அணை­யின் நீர் மட்­டம் வேக­மாக உயர்ந்து 117 அடியை எட்­டி­யது.

இத­னால் தண்­ணீர் திறக்க ஏற்­பாடு செய்­யப்­பட்ட நிலை­யில் அணை­யின் வலது கரை­யில் உள்ள எட்டு கண் மதகு வழி­யாக முதற்­கட்­ட­மாக 3 ஆயி­ரம் கன­அடி தண்­ணீரை முத­ல­மைச்­சர் ஸ்டா­லின் திறந்து வைத்­தார். அணைப்­ப­கு­தி­யில் இருந்த விவ­சா­யி­களை சந்­தித்த முத­ல­மைச்­சர் அவர்­க­ளி­டம் மனுக்­க­ளை­யும் பெற்று குறை­களை கேட்­ட­றிந்­தார்.

நாடு சுதந்­தி­ரம் பெறு­வ­தற்கு முன்­னர் 1942,1943ஆம் ஆண்­டு­களில் மேட்­டூர் அணை மே மாதத்­தில் திறக்­கப்­பட்­டது. சுதந்­தி­ரத்­திற்­குப் பின்­னர் தற்­போ­து­தான் முதல் முறை­யாக மே மாதத்­தில் இந்த அணை திறக்­கப்­பட்­டுள்­ளது.

மேட்­டூர் அணை நீர்ப் பாச­னம் மூலம் திருச்சி, தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், நாகப்­பட்­டி­னம், புதுக்­கோட்டை உள்­ளிட்ட டெல்டா மாவட்­டங்­களின் 17.32 லட்­சம் ஏக்­கர் பரப்பளவு பாச­னத்­திற்­கும் கால்­வாய் பாச­னத்­திற்­கும் போது மான தண்ணீர் கிடைக்கும்