குரங்கம்மை: விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

சென்னை: குரங்கம்மை தொடர்­பாக விழிப்­பு­டன் இருக்­கு­மாறு அனைத்து மாவட்ட ஆட்­சி­யர்­க­ளுக்­கும் தமி­ழக சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் ஜெ.ராதா­கி­ருஷ்­ணன் சுற்­ற­றிக்கை அனுப்­பி­யுள்­ளார்.

குரங்கம்மையால் பாதிக்­கப்­பட்ட நாடு­க­ளுக்­குச் சென்­ற­வர்­களை உரிய முறை­யில் பரி­சோ­தனை செய்ய மாவட்ட மருத்­துவ அலு­வ­லர்­க­ளு­டன் இணைந்து, நோய் பர­வா­மல் தடுக்க ஏற்­பாடு செய்­யு­மா­றும் அவர்­களை ராதா­கி­ருஷ்­ணன் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

குழந்­தை­கள் உள்­பட அனை­வ­ரின் உட­லில் விவ­ரிக்க முடி­யாத தடிப்பு ஏற்­பட்­டால் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறு ஆட்­சி­யர்­கள் மற்­றும் மாவட்ட மருத்­துவ அதி­கா­ரி­

க­ளுக்கு அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

சந்­தே­கத்­திற்­கி­ட­மான அறி­கு­றி­கள் உள்­ள­வர்­களை சுகா­தார மையங்­களில் சேர்க்க ஏற்­பாடு செய்­யு­மா­றும் அவர் கூறி­னார்.

இதற்­கிை­டயே, ரத்­தம், சளி அடங்­கிய ஆய்­வக மாதி­ரி­களை தேசிய தொற்­று­நோய் ஆய்வு நிறு

­வ­னத்­திற்கு அனுப்­பு­மாறு மாவட்ட மருத்­துவ அதி­கா­ரி­க­ளுக்கு மாநில சுகா­தா­ரத்­துறை உத்­த­ர­விட்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!