ஆடம்பர வாழ்க்கை: சீமான் மீது காங். எம்.பி. தாக்கு

ஆடம்பர வாழ்க்கை: சீமான் மீது காங். எம்.பி. தாக்கு

1 mins read
4c68bcda-68f3-4621-8ced-4289b07f28f8
-

கரூர்: கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேசுகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைத் தாக்கிப் பேசினார்.

"அப்பாவி இலங்கைத் தமிழ் மக்களையும் தமிழக மக்களையும் சுரண்டி, ஆடம்பர உல்லாச வாழ்க்கை வாழ்பவர் சீமான். நடிகை விஜய லட்சுமி ஆதாரத்தோடு சீமான் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதையே தான் நானும் கூறினேன். ஆனால், தனிப்பட்ட முறையில் என்னை வக்கிரபுத்தி யுடன் தாக்கிப் பேசுகிறார். நேர்மையானவராக இருந்தால், தாம் பாலியல் குற்றவாளி இல்லை என நீதிமன்றத்தை நாடி மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தி ருக்கலாம்," என்றார் ஜோதிமணி.