கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் கூடாது

கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் கூடாது

1 mins read
568a5c61-f0d8-4df9-af94-5b7922478fa5
-

மதுரை: கோயில் விழாக்­களில் ஆபாச நட­னம் இருந்­தால் காவல்­து­றை­யி­னர் உட­ன­டி­யாக அத­னைத் தடுத்து நிறுத்­த­லாம் என்று மதுரை உயர் நீதி­மன்­றக் கிளை நேற்று கூறி­யது.

கோயில் திரு­வி­ழாக்­களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனு­மதி வழங்­கக் கோரி 100க்கும் மேற்­பட்ட மனுக்­கள் மதுரை உயர்­நீ­தி­மன்­றக் கிளை­யில் தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன. இதை­ய­டுத்து மதுரை, தேனி, திண்­டுக்­கல், திருச்சி, விரு­து­ந­கர், சிவ­கங்கை மாவட்­டங்­களில் இருந்து தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்த மனுக்­களை நீதி­பதி தமிழ்­செல்வி நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்­டார்.

விசா­ரணை முடி­வில் அவர் கூறு­கை­யில், "ஆடல், பாடல் நிகழ்ச்­சி­களில் ஆபாச வார்த்­தை­களோ ஆபாச நட­னங்­களோ இருக்­கக்­கூ­டாது. அவ்­வாறு இடம்­பெ­றும் பட்­சத்­தில் காவல்­து­றை­யி­னர் உட­ன­டி­யாக அந்த நிகழ்ச்­சியை நிறுத்­த­லாம்," எனத் தெரி­வித்­தார்.

இது­போன்ற பல்­வேறு நிபந்­த­னை­களுடன் கோவில் திருவிழா ஆடல்-பாடல் நிகழ்­விற்கு அனு­மதி அளித்­தார் நீதிபதி.