எனது ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல: ஸ்டாலின்

எனது ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல: ஸ்டாலின்

1 mins read
ae49aef4-233a-44c7-8dbf-d9331fc50d22
-

ஆத்­தூர்: தமி­ழ­கத்­தில் நடை­பெற்று வரும் திமுக ஆட்சி ஆன்­மி­கத்­திற்கு எதி­ரா­னது அல்ல என்று முதல்­வர் மு.க. ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

சேலம் மாவட்­டம் ஆத்­தூ­ரில் நேற்று பிற்­ப­கல் நடை­பெற்ற திமுக அர­சின் ஓராண்டு சாதனை விளக்­கப் பொதுக்­கூட்­டத்­தில் பங்­கேற்று அவர் பேசி­னார்.

"திரா­விட மாடல் எதை­யும் இடிக்­காது, உரு­வாக்­கும். யாரை­யும் புறக்­க­ணிக்­காது, அர­வ­ணைக்­கும். திமுக கொடுத்த வாக்­கு­று­தி­களை மக்­கள் மறந்­தா­லும் நான் மறக்­க­மாட்­டேன். தமி­ழக மக்­க­ளுக்­காக என் சக்­தி­யை­யும் மீறி உழைப்­பேன்.

"பெட்­ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்­தி­விட்டு தற்­போது கண் து­டைப்­புக்­காக சிறி­ த­ளவு குறைத்­துள்­ள­னர். இல்­லா­ததை கட்­ட­விழ்த்­து­விட்­டுப் பார்க்­கும் பல­ரால் இருப்­பதை கண் திறந்து பார்க்க முடி­ய­வில்லை. எத்­தனை விஷத்­தன்மை வாய்ந்த பிர­சா­ரங்­களை செய்­தா­லும் திமு­கவை ஒரு­போ­தும் மக்­கள் மன­தி­லி­ருந்து வீழ்த்த முடி­யாது," என்று ஸ்டா­லின் கூறி­னார்.