சென்னை: தமிழகத்தில் கஞ்சா தடுப்பு வேட்டையில் இதுவரை 20 ஆயிரம் பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார். சென்னையை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தார். மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது அவர் எச்சரிக்கை விடுத்தார்.
கஞ்சா ஒழிப்பில் 20,000 பேர் கைது
1 mins read
-

