பல்வேறு ரயில் திட்டங்களைத் தொடங்க பிரதமர் மோடி நாளை சென்னை வருகை

பல்வேறு ரயில் திட்டங்களைத் தொடங்க பிரதமர் மோடி நாளை சென்னை வருகை

1 mins read
ffafcf0c-a309-4e2d-a985-0bdeffc0ab51
-

சென்னை: பிர­தமா் மோடி நாளை (மே 26) சென்னை வரு­கி­றார். நாளை மாலை சென்னை நேரு உள் விளை­யாட்டு அரங்­கில் அமைக்­கப்­படும் விழா மேடை­யி­லி­ருந்து பல்­வேறு திட்­டங்­களை அவர் தொடங்கி வைக்­கி­றார்.

எழும்பூா் ரயில் நிலை­யம் முழு­மை­யாக உல­கத்­த­ரம் வாய்ந்த நிலை­ய­மாக மறு சீர­மைப்பு செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதன்­பொ­ருட்டு ரூ.760 கோடி மதிப்­பி­லான திட்­டப்­ப­ணி­க­ளுக்கு பிர­தமா் மோடி அடிக்­கல் நாட்­டு­கிறாா். இது­போல, மதுரை, காட்­பாடி, ராமே­சு­வ­ரம், கன்­னி­யா­கு­மரி ஆகிய ரயில்

நிலை­யங்­களும் மேம்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இவற்­றின் திட்­டப்­ப­ணி­க­ளை­யும் அவர் தொடங்­கி­வைக்­கிறாா்.

மதுரை-போடி­நா­யக்­கனூா் இடையே ரூ.450 கோடி செல­வில் 98 கி.மீ. தூர மீட்டா் கேஜ் பாதை, அகல ரயில்­பா­தை­யாக மாற்­றப்­பட்டு வரு­கிறது. இந்­தத் திட்­டத்­தில், மதுரை-தேனி வரை அகல ரயில் பாதைப் பணி­கள் முடிந்து அதி­வேக ரயிலை இயக்கி சோதனை நடத்­தப்­பட்­டது. இதை­ய­டுத்து, மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்­க­வுள்­ளது.

இந்­தப் பாதையை பிர­தமா் மோடி நாட்­டுக்கு அா்ப்ப­ணிக்­கிறாா். தொடா்ந்து, இந்­தப் பாதை­யில் ரயில்­சே­வை­யும் அவர் தொடங்கி வைப்­பார். தாம்

­ப­ரம்-செங்­கல்­பட்டு 3-ஆவது ரயில் பாதை­யி­லும் அவர் ரயில் சேவை­யைத் தொடங்கி வைக்­கி­றார்.