சென்னை: அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சசிகலா (படம்), டெல்லி சென்று பாஜக உயர்மட்டத் தலைவர்களைச் சந்திக்க இருப்பதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தச் சந்திப்புக்கு பாஜகவைச் சேர்ந்த தெலுங்கு நடிகை ஒருவர் உதவி செய்து வருவதாகக் கூறப்
படுகிறது. இந்த நடிகை மூலம் டெல்லிக்கு தூதுவிட்டு காத்திருந்த சசிகலாவுக்கு நல்ல செய்திகள் வந்துள்ளனவாம்.
இதனால் சசிகலா விரைவில் டெல்லி பயணம் மேற்கொள்ளப் போகிறார் என்கின்றன அவரது ஆதரவு வட்டாரங்கள். தற்போது ஊர் ஊராகச் சென்று ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வரும் சசிகலாவின் பேட்டி, அறிக்கை என எதுவுமே தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இருப்பினும், அதிமுகவைக் கைப்பற்ற பாஜகவின் துணையை அவர் நாடியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. அதிபர் தேர்தலுக்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதரவான சில சம்பவங்கள் நடக்கும் என்றும் அவை தெரிவித்துள்ளன.

