அரிசி கடத்தலைத் தடுக்க கோரிக்கை

அரிசி கடத்தலைத் தடுக்க கோரிக்கை

1 mins read
fef0bb26-34e1-4b5b-ac79-cca3f164de5d
-

சென்னை: தேமு­திக தலை­வர் விஜ­ய­காந்த் நேற்று ஓர் அறிக்கை வெளி­யிட்­டார்.

அதில், "பொது­மக்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கும் ரேஷன் அரி­சியை கள்­ளச் சந்­தை­யில் வாங்கி, அண்டை மாநி­லங்­க­ளுக்கு அதனை கடத்­திச் சென்று வியா­பா­ரம் செய்­யும் கடத்­தல்­கா­ரர்­க­ளுக்கு அதி­க­பட்­சத் தண்­டனை வழங்க வேண்­டும். ரயில்­கள் மற்­றும் பேருந்­து­கள் மூலம் ரேஷன் அரிசி கடத்­தப்­ப­டு­வதை தடுக்க குடி­மைப்­பொ­ருள் வழங்­கல் குற்றப் புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரி­கள் சோத­னையை தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும்," என்று தெரி­வித்­துள்­ளார்.

தமிழகத்திலிருந்து ஏராளமான மூட்டை ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்திற்குக் கடத்தப்பட்டு வருவதாக அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.