சிக்கலில் மாட்டிவிட்ட எளிமை

சிக்கலில் மாட்டிவிட்ட எளிமை

1 mins read
fefa0302-833d-4013-b367-9d9c14b521a8
ஆட்டோ ஓட்டுநர் இருக்கையில் அமைச்சர். படம்: சமூக ஊடகம் -

விழுப்­பு­ரம்: விழுப்­பு­ரம் மாவட்­டம், அனந்­த­பு­ரம் அருகே புதுப்­பேட்டை பகு­தி­யில் திமுக நிர்­வாகி வெங்­க­டே­சன் உடல்­ந­லக் குறை­வால் தனது இல்­லத்­தில் உள்­ளதை அறிந்த சிறு­பான்­மை­யி­னர் நலத்­துறை அமைச்­சர் மஸ்­தான் நேற்று புதுப்­பேட்­டைக்­குச் சென்­றார்.

வெங்­க­டே­சன் வீட்­டிற்­குச் செல்­லும் சாலை குறு­க­லாக இருந்­த­தால் ஆட்டோ ஒன்­றில் அமைச்­சர் ஏறிச் சென்­றார். இந்­தப் படம் சமூக ஊட­கங்­களில் பர­வி­யது. ஆட்டோ ஓட்­டு­நர் இருக்­கை­யில் அமைச்சர் அமர்ந்­து பயணம் செய்தது மோட்­டார் வாக­னச் சட்ட விதி­க­ளுக்கு எதி­ரா­னது என்ற விமர்­ச­ன­மும் எழுந்­துள்­ளது.