சென்னை விமான நிலையத்தில் ரூ. 5 கோடி ஹெராயின் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 5 கோடி ஹெராயின் பறிமுதல்

1 mins read
459015a3-28c4-4da0-a895-65c44a7ed6e2
-

சென்னை: சென்னை மீனம்­பாக்­கம் பன்­னாட்டு விமான நிலை­யத்­தில் சுங்­கத் துறை­யி­னர் நடத்­திய சோத­னை­யில் லுபன் பங்­கிரே, 42, என்­னும் வாலி­பர் சிக்­கி­னார்.

உகாண்­டா­வைச் சேர்ந்த அவர் ஷார்­ஜா­வி­லி­ருந்து விமா­னம் மூலம் சென்னை வந்­தார். விசா­ர­ணை­யின்­போது அதி­கா­ரி­க­ளி­டம் அவர் முன்­னுக்­குப் பின் முர­ணாக பேசி­ய­தால் சந்­தே­கம் ஏற்­பட்­டது. பின்­னர் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்­த­தில் அவ­ரது வயிற்­றில் ஏதோ மர்­மப் பொருள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது தெரிய வந்­தது. இத­னை­ய­டுத்து அவரை அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்து வயிற்­றில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 63 மாத்திரைகளைக் கைப்­பற்­றி­னர்.

அவை ஹெரா­யின் போதை மாத்­தி­ரை­கள் என தெரி­ய­வந்­தது. இவற்­றின் மதிப்பு ரூ. 5 கோடியே 56 லட்­சம். ஆட­வ­ரைக் கைது செய்த அதி­கா­ரி­கள் ஹெரா­யின் போதை மாத்­தி­ரை­களை எங்­கி­ருந்து யாருக்­காக கடத்தி வந்­தார், இதன் பின்னணி­யில் யார் உள்­ள­னர் என விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.