ரூ. 31,400 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்

ரூ. 31,400 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்

2 mins read
de3dc04f-f860-46f6-8a58-9f333586d1a2
-

சென்னை: தமி­ழ­கத்­தில் ரூ.31,400 கோடி மதிப்­பி­லான 11 திட்­டங்­களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண் ணாமலை தெரிவித்துள்ளார்.

இதற்­கா­கச் சென்னை வரும் பிர­த­மர் மோடி, ஜவ­ஹர்­லால் நேரு விளை­யாட்டு அரங்­கில் இன்று பிரம்­மாண்­ட­மாக நடை­பெற உள்ள நிகழ்­வில் பங்­கேற்க உள்­ளார்.

பிர­த­மர் வரு­கையை ஒட்டி பாது­காப்பு ஏற்­பா­டு­களும் பலப்படுத்தப் பட்டுள்ளன.

ஹைத­ரா­பாத்­துக்­கும் சென்­னைக்கும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்டு பல்­வேறு திட்­டங்­க­ளை­யும் பிரதமர் தொடங்கி வைக்­கி­றார்.

முதல்­கட்­ட­மாக ஹைத­ரா­பாத் துக்­குச் செல்­லும் அவர், இந்­திய வர்த்­த­கப் பள்­ளி­யின் (ஐஎஸ்பி) 20வது ஆண்­டு­விழா கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொண்டு பட்­ட மளிப்பு விழா­வில் உரை நிகழ்த்து கிறார்.

அதன்­பின்­னர், இன்று மாலை சென்னை வரும் பிர­த­மர் மோடிக்கு விமான நிலை­யத்­தில் உற்­சாக வர­வேற்பு அளிக்­கப்­ப­டு­கிறது.

அதைத்­தொ­டர்ந்து சென்னை நேரு உள்விளை­யாட்டு அரங்­கில் நடை­பெ­றும் பல்­வேறு திட்­டப் பணி களை­யும் பிர­த­மர் மோடி தொடங்கி வைக்கிறார்.

தமி­ழ­கத்­தில் உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­து­தல், போக்கு­வ­ரத்து வச­தி­களை அதி கரித்­தல் உள்­ளிட்ட 31,400 கோடி ரூபாய் மதிப்­பி­லான 11 திட்­டங்­களை அவர் தொடங்கி வைக்­கி­றார்.

இதன்­மூ­லம் தமிழ்­நாட்­டில் சமூ­கப் பொரு­ளா­தார வளம் மேம்­பாடு அடை­யும். பல்­வேறு தரப்பு மக்­க­ளுக்­கும் வாழ்­வி­யல் ரீதி­யாக இத்­திட்­டங்­கள் உத­வி­க­ர­மாக அமை­யும் என்று நம்பப்படுகிறது.

ரூ.2,900 கோடி செல­வில் முடி வுற்றுள்ள ஐந்து பெரும் திட்­டங்­களை­யும் பிர­த­மர் தொடங்கி வைக்­கி­றார்.

மதுரை-தேனி இடையே ரூ.500 கோடி செல­வில் புதி­தாக அமைக்­கப்பட்ட அகல ரயில் பாதையை தொடங்கிவைக்க உள்­ளார்.

இத்­திட்­டத்­தின் மூலம் மதுரை -தேனி­யில் சுற்­று­லாத்­துறை வளர்ச்சி அடை­யும் என்று கூறப்­படு­கிறது.

அதே­போல், தாம்­ப­ரம்-செங்­கல் பட்டு இடையே ரூ.590 கோடி செல­வில் அமைக்­கப்­பட்­டுள்ள மூன் றாவது ரயில் பாதை­யையும் எரி­வா­யுக் குழாய் திட்­டம், எரி­வாயு இணைப்­புத் திட்­டம் ஆகி­ய­வற்­றை­யும் பிர­த­மர் தொடங்கி வைக்கி­றார்.

இதன்­மூ­லம் நுகர்­வோர்­க­ளுக்­கும் தொழிற்­சா­லை­க­ளுக்­கும் மிக எளிமையான முறை­யில் எரி­வாயு விநி­யோ­கிக்க முடி­யும்.

சென்­னை­யில் கலங்­கரை விளக்­கம் பகு­தி­யில் ரூ. 114 கோடி செல வில் பிரத­ம­ரின் வீடு கட்­டும் திட்­டத்­தின் கீழ் கட்­டப்­பட்­டுள்ள 1,152 வீடு­க­ளையும் திறந்து வைக்­கி­றார்.

சென்னை துறை­மு­கம், மது­ர­வா­யல் இடையே இரண்­டடுக்கு சாலைத் திட்­டம், சென்னை-எழும்­பூர் ரயில் நிலை­யத்தை மேம்படுத்தும் திட்­டம் உள்­பட மொத்­தம் ரூ.28,500 கோடி மதிப்­பிலான திட்­டங்­க­ளுக்கு பிர­த­மர் அடிக்­கல் நாட்­டு­கி­றார்.