அடுத்தடுத்து கொள்ளை: பிடிபட்ட ஒரே குடும்பத்தினர்

ஈரோடு: ஈரோட்­டில் அடுத்­தடுத்து வீடு­களைக் குறிவைத்து கொள்­ளை­யடிக்­கப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில், ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஆறு பேர் கைதாகி உள்­ள­னர்.

சுற்­று­லா­வுக்கு வந்­த­வர்­கள் போல் நடித்து, தமி­ழ­கத்­தின் பல மாவட்­டங்­களிலும் பூட்­டி­யி­ருக்­கும் வீடு­களில் கொள்­ளை­யடிப் பதை வாடிக்­கை­யாக வைத்­திருந்­ததாக தெலுங்­கானா மாநி­லத்­தைச் சேர்ந்த மூன்று தம்­பதி­யரும் விசா­ர­ணை­யில் கூறினர்.

ஈரோடு, மூலப்­பா­ளை­யம் பகு­தி­யில் கடந்த 10 நாள்­க­ளுக்கு முன்பு பூட்­டி­யி­ருந்த மூன்று வீடு­களில் கொள்ளை போனது.

இது­கு­றித்து, காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வந்­த­ நி­லை­யில், அதே பகு­தி­யில் மீண்­டும் இரண்டு வீடு­களில் கொள்­ளை அரங்கேறியது.

இதை­ய­டுத்து, சிறப்பு தனிப்­படை காவலர்கள் கொள்ளையர் களைப் பிடிக்கும் பணியில் முடுக்கி விடப்பட்டனர்.

இந்நிலையில், தெலுங்­கானா வைச் சேர்ந்த சூர்யா-பாரதி, மணி-மீனா, விஜய்-லட்­சுமி ஆகிய மூன்று தம்­ப­தி­ய­ரும் சிக்­கி­னர். அவர்­க­ளிடமிருந்து 35 பவுன் தங்க நகை­களும் ரூ.50,000 ரொக்­கமும் பறி­மு­தல் செய்­யப்பட்டது.

விசா­ர­ணை­யில், இவர்கள் தமி­ழ­கத்­தில் 30க்கும் மேற்­பட்ட வழக்­கு­களில் தேடப்­படும் குற்­ற­வா­ளி­களா­க இருப்­பதும் தெரி­ய­வந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!