மநீம மாநிலச் செயலாளர் பதவி விலகல்

மநீம மாநிலச் செயலாளர் பதவி விலகல்

1 mins read
9ffafbe1-a1cb-4533-8e12-495b582da7d1
-

சென்னை: மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யில் இருந்து அதன் தலைமை நிலைய மாநிலச் செய­லர் பொறுப்­பில் இருந்த இ.சரத்­பாபு வில­கி­உள்­ளார். கட்­சித் தலை­வர் கமல்­ஹாசனுக்கு கட்­சி­யில் ஈடு­பாடு குறைந்­த­து­விட்­டது என்­றும் அதுவே தமது வில­கல் முடி­வுக்­குக் கார­ணம் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் நடை­பெற்ற இரு உள்­ளாட்­சித் தேர்­தல்­க­ளி­லும் மக்­கள் நீதி மய்­யம் கட்­சித் தலை­வர் கமல்­ஹா­ச­னின் ஈடு­பாடு மிக­வும் குறை­வாக இருந்­தது என்று அறிக்கை ஒன்­றில் சரத்­பாபு குறிப்­பிட்­டுள்­ளார்.

"கட்­சித் தலை­வர் இப்­போது வரு­வாய் ஈட்­டும் மன­நி­லைக்கு முழு­வ­து­மாகச் சென்­று­விட்­டார். இத­னால் தமிழ்­நாட்­டில் இக்­கட்சி­யால் எவ்­வித மாற்­றத்­தை­யும் மக்­க­ளுக்­காக கொண்­டு­போய்ச் சேர்க்­க­மு­டி­யாது என்ற நிலை­யில், இக்கட்­சி­யில் தொடர மன­மில்­லா­மல் வில­கு­கி­றேன்," என்று சரத்­பாபு தெரி­வித்­துள்­ளார்.

கட்­சித் தலை­வர் என்ற வகை­யில் கமல்­ஹா­ச­னின் கொள்­கை­களை தமி­ழ­கத்­தின் அனைத்து பகு­தி­க­ளுக்­கும் கொண்டு சேர்க்­கும் பணி­யில் தாம் ஈடு­பட்­டி­ருந்­த தாக அவர் கூறியுள்ளார்.

மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யின் துணைத் தலை­வ­ராக இருந்த மகேந்­தி­ரன், சுற்­றுச்­சூ­ழல் அணி நிர்­வாகி பத்­ம­பி­ரியா, தலைமை நிலைய பொதுச்­செ­ய­ல­ராக இருந்த முன்­னாள் ஐஏ­எஸ் அதி­காரி சந்­தோஷ் பாபு போன்­றோர் ஏற்­கெ­னவே அக்­கட்­சி­யில் இருந்து வெளி­யே­றி­விட்­ட­னர்.