மாநிலங்களவைத் தேர்தல்: இழுபறிக்குப் பின்னர் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மாநி­லங்­க­ள­வைத் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர்­களை அதி­முக அறி­வித்­துள்­ளது. முன்­னாள் அமைச்­சர் சி.வி.சண்­மு­கம், முது­கு­ளத்­தூர் ஒன்­றிய செய­லா­ளர் தர்­மர் ஆகிய இரு­வ­ரது பெயர்­களும் நீண்ட இடை­வெ­ளிக்­குப் பின் அறி­விக்­கப்­பட்­டது.

எதிர்­வ­ரும் ஜூன் 10ஆம் தேதி மாநி­லங்­க­ள­வை­யில் காலி­யாக உள்ள இடங்­க­ளுக்­குத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இம்­முறை தமி­ழ­கத்­தில் இருந்து ஆறு பேர் மாநி­லங்­க­ள­வைக்கு தேர்வு செய்­யப்­பட உள்­ள­னர்.

சட்­டப்­பே­ர­வை­யில் உள்ள எம்­எல்­ஏக்­க­ளின் எண்­ணிக்­கை­யின் அடிப்­ப­டை­யில், அதி­மு­க­வில் இருந்து இம்­முறை இரண்டு பேரை மாநி­லங்­க­ள­வைக்கு தேர்வு செய்ய முடி­யும். இதற்­கான வேட்­பா­ளர்­க­ளைத் தேர்வு செய்­வ­தில் அதி­மு­க­வில் இழு­பறி நீடித்து வந்­தது.

வேட்­பா­ளர் தேர்வு தொடர்­பில் எடப்­பாடி பழ­னி­சாமி, ஓ.பன்­னீர்­செல்­வம் தரப்­பி­னர் இடையே ஒரு­மித்த கருத்து ஏற்­ப­ட­வில்லை என்­றும் இரு­த­ரப்­புமே தங்­க­ளது ஆத­ர­வா­ளர்­களை கள­மி­றக்­கு­வ­தில் முனைப்­பாக உள்­ள­னர் என்­றும் தக­வல் வெளி­யா­னது.

பத்து நாள்­கள் இழு­பறி நீடித்து வந்த நிலை­யில், பழ­னி­சா­மி­யின் ஆத­ரவு பெற்ற முன்­னாள் அமைச்­சர் சி.வி.சண்­மு­க­மும் ஓ.பன்­னீர்­செல்­வம் ஆத­ரவு பெற்ற முது­கு­ளத்­தூர் ஒன்­றிய செய­லா­ளர் தர்­ம­ரும் வேட்­பா­ளர்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­களில் தர்­ம­ருக்கு வாய்ப்பு கிடைத்­தி­ருப்­பது அதி­முக முன்­னணி தலை­வர்­க­ளையே ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது.

கட்­சி­யில் அதிக செல்­வாக்கு இல்­லா­த­வர் என்­றும் பன்­னீர்­செல்­வத்­தின் ஆத­ர­வா­ளர் என்ற ஒரே கார­ணத்­தி­னால் அவ­ருக்கு வாய்ப்பு கிடைத்­துள்­ளது என்­றும் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!