சட்டப் போராட்டம் நீடிக்கும் என்கிறார் சசிகலா

சென்னை: அதி­மு­கவை மீட்­கும் சட்­டப் போராட்­டம் தொட­ரும் என வி.கே.சசி­கலா தெரி­வித்­துள்­ளார். மேலும், அதி­மு­க­வில் உள்ள அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து தனது தலை­மை­யில் செயல்­ப­டு­வார்­கள் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய சசி­கலா, தமி­ழ­கத்­தில் கொலைக் குற்­றங்­கள் அதி­க­ரித்­து­விட்­ட­தா­க­வும் இதற்கு நிர்­வா­க­மின்­மையே முக்­கிய காரணம் என்­றும் சாடி­னார்.

காவல்­துறை முதல்­வ­ரின் கட்­டுப்­பாட்­டில்­தான் இருக்­கி­றதா என்று சந்­தே­க­மாக இருக்­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஓர் அரசு மக்­க­ளுக்கு நல்­லது செய்­தா­லும் சரி, மக்­க­ளுக்கு எதி­ராகச் செயல்­பட்­டா­லும் சரி அதை­வெ­ளி­யில் கொண்டு வரு­வது ஊட­கங்­கள்­தான் என்­றும் அரசு தன் தவ­று­களைத் திருத்­திக்கொள்ள வேண்­டுமே தவிர, செய்­தி­யா­ளர்­கள், ஊட­கங்­கள் மீது நட­வ­டிக்கை எடுப்­பது சரி­யல்ல என்றும் சசி­கலா தெரி­வித்­தார்.

"அதி­மு­க­வில் இப்­போது இருப்­ப­வர்­களை ஜெய­ல­லி­தா­வு­டன் ஒப்­பிட முடி­யாது. கட்­சித் தொண்­டர்­கள் முடிவு செய்து ஓர் இயக்­கத்­துக்குத் தலை­வ­ராக இருந்­தால்­தான் அந்த தலை­மை­யின் கீழ் எல்­லோ­ரும் கட்­டுப்­பட்டு இருப்­பார்­கள்.

"ஆனால், இப்­போது அது­போன்ற நிலைமை அதி­மு­க­வில் இல்லை," என்­றார் சசி­கலா.

மாநி­லங்­க­ள­வைத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை முடிவு செய்­வ­தில் தாம­தம் ஏற்­படு­வது அத்­த­கைய நிலை­மை­யின் வெளிப்­பா­டு­தான் என்று குறிப்­பிட்ட அவர், கட்­சித்­தொண்­டர்­கள் மட்­டு­மல்­லா­மல் பொது மக்­களும் அதி­மு­க­வில் நில­வும் குறை­களை தம்­மி­டம் கூறு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"திமுக ஆட்­சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. ஆனால் மக்­க­ளுக்கு அது எது­வும் செய்­ய­வில்லை என்று சொல்­கி­றார்­கள்.

"கட்­சி­யைப் பொறுத்­த­வரை எல்­லாமே தொண்­டர்­கள்­தான். அவர்­கள் மீது இருக்­கும் நம்­பிக்கை­யில்­தான் நான் அதி­மு­க­வுக்கு தலைமை ஏற்­பேன் என்று சொல்­கி­றேன்," என்­றார் சசி­கலா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!