முன்னாள் முதல்வருக்கு நான்காண்டுகள் சிறை

முன்னாள் முதல்வருக்கு நான்காண்டுகள் சிறை

1 mins read
30a51f5c-8fb4-4ec8-b9dd-c78d75887e17
-

புதுடெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அத்துடன், அவரது நான்கு சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் ரூ.50 லட்சம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓம் பிரகாஷ் சௌதாலா கடந்த 1999 முதல் 2004ஆம் ஆண்டுவரை அரியானா மாநில முதல்வராக பதவி வகித்தவர். அப்போது அவர், தனது பதவியைத் தவறான முைற யில் பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.6 கோடியே பத்து லட்சம் சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. ஓம் பிரகாஷ் சௌதாலா உள்ளிட்டோர் குற்றவாளிகளாகவும் அறிவிக்கப் பட்டு உள்ளனர்.