ஆரணி: ஆரணி அருகே வசித்து வரும் 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களது வசிப் பிடங்களில் கடந்த ஆறு மாதமாக தெருவிளக்கு எரியாததால் மின் விளக்கு கம்பங்களில் தீப்பந் தங்களை ஏற்றி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் அதி காரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, அம்மாபாளையத்தில் உள்ள ஏஎஸ்ஆர் நகர், காமராஜ் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதி களில் கடந்த ஆறு மாதங்களாக தெரு மின்விளக்குகள் எரிய வில்லை. இதனால், இரவு நேரத்தில் விபத்துகள் ேநர்வதாக வும் பாம்பு, தேள் உள்ளிட்டவை இழைவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

